பிறந்திருக்கும் 2023 அனைவருக்கும் சிறப்பான ஆண்டாக அமைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.ஒவ்வொரு வருடமும் இதே நாளில் ஒவ்வொரு பதிவு இட்டு வரும் நேரம் மனது புதிதாக பிறந்தது போல இருக்கும்.ஆனாலும் 2018 இலங்கையில் ஈஸ்டர் குண்டு தாக்குதல்.2020 கோவிட் ஊரடங்கு2021 மீண்டும் கோவிட் அலை2022 பொருளாதார சீரின்மை என நாடு ஒரு புறம் தள்ளாடினாலும் புதிய வாய்ப்புகள் புதிய மனிதர்கள் புதிய முயற்சிகள் என நகர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த ஆண்டும் வெற்றிகள் தொடர நல்வாழ்த்துக்கள். ...
வருடந்தோறும் தை 1ம் திகதி ஆங்கில புத்தாண்டு தினத்தில் தவறாது இதுவரை இந்த blogல் பதிவிடப்பட்டு வந்திருக்கிறது.இன்றும் மற்றொரு புத்தாண்டு தினம்.கடந்த ஆண்டு ஆதரவற்ற வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிக்கும் We Feeders பணிகள் ஆரம்பிக்கப்பட்டு அனைத்து தரப்பினரதும் பேராதரவுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.பழையன கழிதலும் புதியன புகுதலுமாக காலம் எப்போதும் மாற்றங்களை ஏற்படுத்திய வண்ணமே இருக்கின்றது.இந்த ஆண்டு அனைவருக்கும் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துக்கள். ...
இன்னுமொரு புது வருடத்தில் இன்று,..2020 வலைப்பதிவு யுகம் தசாப்தத்தை கடந்து பயணித்துக்கொண்டிருக்கிறது.பார்க்கலாம் இந்த ஆண்டு என்னென்ன தர காத்திருக்கிறதென்று...நன்றி. ...
எல்லா ஆண்டுகளுமே ஏதோ கனவுகளுடன் ஆரம்பிக்கும், எல்லா ஆண்டுகளும் ஏதோ சில குறைகளுடன் நிறைவடைவது போல் தோன்றும்.பிறந்தருக்கும் 2017 சில கனவுகளுக்கு செயல் கொடுத்துள்ளதோடு இனிய பல அனுபவங்களையும் தந்துள்ளது.எப்போதும் தோழ்கொடுக்கும் நண்பர்களுக்கு மீண்டும் நன்றிகள்.இந்த ஆண்டில் மொத்தமாக 365 வாய்ப்புகள் இருப்பதால் இந்த ஆண்டு வெற்றிகள் மட்டுமே கிடைக்க அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ...
சைக்கிள் நம் வாழ்க்கையோடு எப்படி இரண்டற அல்லது மூன்றர கலந்துள்ளது என்பதற்கு சில கலைச்சொற்களின் டிக்ஷனரியை இங்கு தருகிறேன்.ரெண்டு பேரும் சைக்கிள் - இரு நண்பர்கள் அல்லது நண்பிகள் ஓரின சேர்க்கையாளர்கள் என்று பொருள்படும்.க்ரீஸ் போய்ட்டுது - இரு பெரியவர்கள் தங்கள் ஆண்மைக்குறைவு பற்றி கருத்து பகிர்கிறார்கள்.வால்ட்யூப்பால காத்து போகுது - ஒரு மாணவி தான் மாதவிடாய் காரணமாக வகுப்புக்கு அல்லது கோவிலுக்கு வர முடியாது என்பதை தன் நண்பிக்கு எடுத்தியம்புகிறாள்.அவன் கம்பி - அவர் மைக்கல் ஜாக்சனின் ரசிகர் அல்லது ஓரின சிறுவர்
'முக்கிய விடையம்' பற்றி பேசுவதற்கு முன் ஒரு மூன்று வருடத்திற்கு முந்தய சின்ன ஃப்ளஷ்'back'அப்போது தொழில் நிமிர்த்தமாக குளப்பிட்டி சந்தி பகுதியில் ஓர் வீட்டினை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த காலம்!எனது வீடு அருகிலிருந்ததால் நான் காலை கடன், குழியல் என்பவற்றுக்காக வீட்டுக்கு சென்று வருவதால் தங்கியிருந்த வாடகை வீட்டிற்கு தண்ணிவசதி செய்திருக்கவில்லை.வேலை முடிந்த மாலை வேளைகளில் அரட்டையடிப்போம் நமது அரட்டை குழுவில் இருந்த செந்தூரன் என்ற நண்பனால் அவனது நண்பன் 'சிவா' அறிமுகம் செய்து வைக்கப்பட்டான்.சிவா வவுனியாவை சேர்
வணக்கம் நண்பர்களே!இன்னுமொரு புத்தாண்டு தினத்தில் இன்று..!கடந்த வருடம் எனக்கு பெற்று்தந்த பல இன்ப அதிர்ச்சிகள் இந்த வருடமும் தொடரவும் என்னோடு எப்போதும் கூடவரும் நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.வலைப்பதிவு நட்புகள் எம் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்கள் சாதாரணமானதல்ல! தொடர்வோம்..!இந்த வருடம் எந்த ரெஷல்யூஷனும் எடுக்கவில்லை! பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று.மீண்டும் நன்றிகள். ...
இது என் நண்பன் ஒருவனுக்கு நடந்தது...அவரு பேரு சோபி.ஐடி பணியாளர். போதுமான பணப்புக்கம் இருந்தாலும், தேவைகளும் அதிகமாக இருந்ததால் சொந்த பிஸ்னஸ் செய்யலாம் என்ற எண்ணத்திலிருப்பவர்.இவர் உணவகம் ஒன்றில் துறைமுகத்தில் பணிபுரியும் சில மனிதர்களை சந்தித்திருக்கிறார். அவர்களில் ஒரு சிங்கள பணியாளன், சோபியிடம் யாழ்ப்பாணத்தில் தனக்கு இடங்கள் தெரியாது எனவும் நல்ல சாப்பாட்டு கடை எங்கிருக்கிறது? தங்கிநிற்க நல்ல இடம் எது? எனவும் கேட்டறிய சோபியுடன் உணவருந்தியபடியே சகஜமாக பேச ஆரம்பித்துள்ளான்.அவரை பற்றி விசாரிக்க தான் பிறிமா மாவ
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்பவர்கள் காலையில் ஆயிரத்து முன்னூறு ரூபாக்கு பஸ் புக் செய்து மாலையில் ஆட்டோவுக்கு இருநூற்றம்பது கொடுத்து பஸ் புறப்படும் இடத்துக்கு சென்று தம் சீட்டில் அமருவது வழக்கம்.இரண்டு மூன்று முறை இப்படி சென்றால் டிக்கட் போடும் இளைஞர் பழக்கமாகி அடுத்தமுறை போன்செய்தே புக்செய்துவிட்டு பிரதான சாலையில் பஸ்வரும் நேரம் ஏறிச்செல்வதும் உண்டு. அடுத்த கட்டமாக நூறு ருபா குறைவாக வாங்குவார்கள். அல்லது நூறு ரூபா அதிகம் கொடுத்து இளம் பெண்களுக்கு அருகில் சீட் புக் செய்பவர்களும் உண்டு.நாம் பஸ் ஏறுவது
ஆவிகளுடன் பேசுவது எப்படி என்ற என் முதல் கட்டுரையை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.இந்த சம்பவம் நடைபெற்றது சில காலங்களுக்கு முதல் ஆகும்.வேலை நிமிர்த்தம் நண்பர்களுடன் தனியாக ஓர் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தோம்.அந்த கால நாற்சதுர வீடு. வீட்டுக்குள்ளேயே முற்றம். ஒருஅறையில் மரப்படிக்கட்டுகள் ஏறிபார்த்தால் மேலே பரண் அதில் பழைய தட்டு முட்டு சாமான்கள். பகலில் நிறையபேர் வந்து போனாலும் இரவுகளில் மூன்று அல்லது நான்கு பேர் மட்டுமே தங்கி நிற்பது வழக்கம். ஹாரர் மூவி செட் மாதிரியே இருக்கும். வீட்டுக்கு முன்னாலேயே ..
இயக்குனர் மெண்டிஸ் இயக்கத்தில் கவிமாறன் மற்றும் பலரது நடிப்பில் எனது எடிட்டிங் அன்ட் பின்னணி இசையில் உருவான குறும்படம் கரும்பலகை.கன்டிகேம் எனப்படும் கேமராவில் மிக நீ......ண்ட ஒளிப்பதிவில் எடுக்கப்பட்டு ஃப்ரேம் பை ஃபரேமாக வெட்டி இருபது நிமிட குறும்படமாக எடிட் செய்தோம். 2010ம் ஆண்டு வெளியவதற்கு சில நாட்களே இருந்தநிலையில் இரவு முழுவதும் சில நாட்கள் எடிட்டிங் அன்ட் பின்னணி இசை வேலைகள் தொடர்ந்தது. இது கவிமாறனின் முதலாவது சினிமா பிரவேசமாக அமைந்தது. (பின்நாட்களில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த முதலாவது திரைப்படத்
பதிவர் கானா வரோ இயக்கத்தில் உருவாகிக்கொண்ருக்கும் இலவு குறும்படத்தின் ப்ரோமோ பாடல் அண்மையில் வெளியானது.தர்ஷானன் இசையமைக்க பதிவர் இரோஷன் பாடல் வரிகளை தர்ஷானனுடன் இணைந்து எழுதியுள்ளார். வரிகளில் யாழ்ப்பாண பிரதேச வார்த்தைகளை ஹைலைட் செய்துள்ளார்கள்.கவிஷாலினி பாடலை பாடியுள்ளார். ஸரூடியோ வர்ஷனாக வெளியாகியிருக்கும் இப்பாடலில் குறும்படத்தின் சில காட்சிகளும் ஒளிபதிவாளர் நிரோஷ்ன் கைவண்ணத்தில் இணைக்கப்பட்டுள்ளது. வரோவின் இயக்கத்தில் படம் யாழ்ப்பாணத்தில் படமாக்கப்பட்டு இசை கொழும்பில் ஒலிப்பதிவு செய்யப்பட்டு வெளிவந்துள்
கடந்த வருடம் தந்த இனிய அனுபவங்களோடு இந்த வருடமும் வெற்றிக்கதைகள் தொடரவும் சாதனைகள் குவியவும் பதிவுலக நண்பர்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். ...
இந்த வருடம் அனைவருக்கும் இலக்குகளை அடையும் வெற்றிகளையும் வாழ்க்கைப்பயணத்தில் மகிழ்ச்சியையும் பல்வேறு சாதகைளையும் பெற்றுத்தர நண்பர்கள் அனைவருக்கும் என் புதுவருட வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்...!பதிவுலகத்தில் சந்தித்த இனிய பதிவர்கள் நண்பர்கள் இனிய உறவுகளாகியமையும் பின்நாளில் எம்மோடு கைகோர்த்து பல கனவுகளுக்கு செயல் கொடுக்கவும் பல்வேறு வெற்றிகளையும் பெற்று தந்த நினைவுகளோடு மீண்டும் இந்த வருடமும் பதிவுகள் பல இடுவதற்கு தி்டமிட்டுள்ளேன்.நன்றி. ...
ஆரம்பிக்கும் போது மிகவும் தொலைவிலுள்ள இலக்காக தென்பட்ட விடையம் இன்று மிக அருகில் கைகூடியுள்ளது.ஏற்கனவே குறும்படங்கள் தயாரிப்பது பற்றி இலங்கை பதிவகள் ஆலோசித்து வைத்த விடையம் பின்னர் பலர் கலந்தாலோசனை செய்த போது எனக்கும் இது பற்றிய ஆவலை தூண்டியது...! பதிவுலகிலிருந்த பல நண்பர்களும் உற்சாகமூட்ட ஸ்ரார்ட் மீசிக்இப்போ கதை வேணுமே...!யாழ்ப்பாணத்திலிருக்கும் பதிவர்கள் எப்போது சந்தித்தாலும் யாழ்ப்பாணத்தை பற்றி கதைப்பது வழக்கம். அதையே கதையின் கருப்பொருளாக வைத்தோம்.லொகேஷன்...!பதிவர்கள் வழக்கமாக சந்திக்கும் இடங்களான நல்லூ