அவள்!

கனவுகளின் உலகம்
அவள், அழகிய வினா?என் இரகசியக் கனா!அவள், ஆறாத காயம்,என் வாழ்வின் பாலம்.அவள்,இதயத்தின் ஒலி,என் வறட்சியின் வலி.அவள்,ஈரமான தென்றல்,என் பாதையின் முட்கள்.அவள்,உணர்வுள்ள இசை,என்னை இயக்கும் விசை.அவள்,ஊக்க நதி,என்னை துரத்தும் விதி.அவள்,எளிமையின் உருவம்,என் சுவாசத்தின் துயரம்.அவள்,ஏகாந்தப் பாதை,பனியுடன் பிறந்த காலை.அவள், ஐயத்தின் உடல்,என் துணிச்சலின் நிழல்.அவள்,ஒடுங்கிய இரவு,என் தனிமையில் உறவு.அவள்,ஓவிய வர்ணம்,என் தேடலின் கிண்ணம். ...

அழகிய தருணங்கள்

கனவுகளின் உலகம்
அம்மாவின் மடியோடு உறங்கிய இரவுகள்,அப்பா அரவணைத்து தட்டிக் கொடுத்த நேரங்கள்..இருட்டு வானில் ஜன்னல் நட்சத்திரம் எண்ணி மகிழ்ந்த இரவுகள்..எதற்கும் துணியும் இயல்பான வீரனாய் சுற்றித் திரிந்த பள்ளிப் பருவங்கள்.. நட்புக்குள் வாழ்வை சுருக்கி நகைப்புடன் நடந்த தருணங்கள்..கரையை சேர போராடும் அலையில் காதலோடு கால் நனைத்த நாட்கள்.. மனதை திருடிய மங்கையை மண மேடையில் கைப் பிடித்த நிமிடங்கள்..முதல் மோகத் தீயில் வெட்கப் போர்வை எரிய வியர்வையோடு கழிந்த பொழுதுகள்..என் உயிர் சுமந்து புதிதாய் பூத்த பிஞ்சை அள்ளிக் கொஞ்சி விளையாடிய வி

"போய் வாறன்"

கனவுகளின் உலகம்
இது ஒரு ஊஞ்சல் பயணத்தின் ஒப்பிடம்,உணர்வைக் கிறுக்கும் ஒரு கைக் குழந்தையின் ஓவியம்.பிரிவை விடப் பயங்கரம் பூமியில் இல்லை, அதை ருசிப்பவன் மறுமுறை மரணிப்பதில்லை. நினைவோடு வாழ்ந்தால் எங்கிருந்தும் வாழலாம் என்ற என் கருத்துக்கள் எல்லாம் கண்முன்னே கருகிப் போகிறது.. கண்களிடம் இருந்து, கனவுகளை; காலம் கழட்டி எறிந்த வலி இன்னும் தீரவில்லை. வலியினால் விழி நீர் விழுவதை தடுக்க முடியவில்லை. "விமான நிலையம்" என் போன்றோருக்கு கண்ணீரைக் காதலிக்கும் ஒரு கல்லறைக் கட்டடம். பிரிவுகளுக்கு பின்னணி இசை வடித்துக் கொண்டிருக்கிறது ஏறி இற

நான் கவிஞனாய்..

கனவுகளின் உலகம்
நான் கவிஞனாய்..நிஜங்களை சொல்லி விட ஆசைதான் நிதர்சனம் தொகுத்துவிட ஆசைதான் மனிதனை நேசிக்க ஆசைதான் - அவன் மனங்களை வாசிக்க ஆசைதான்.நான் கவிஞனாய்..கல்லறைக்குள் வாழ்ந்திட ஆசைதான் கனாவினுள் கண்மூடிட ஆசைதான்மௌனத்தின் மொழி எழுத ஆசைதான்- முதல் மோகத்தில் ஊமையாக ஆசைதான்.நான் கவிஞனாய்..ஊனங்களை உசுப்பிவிட ஆசைதான் ஊழல்களை ஒழித்துவிட ஆசைதான் காதலுக்கு கண் செதுக்க ஆசைதான் - இந்த காலத்துக்கும் கற்றுக் கொடுக்க ஆசைதான்.நான் கவிஞனாய்..எண்ணங்களை எடுத்தியம்ப ஆசைதான் எளிமையில் ஏழை போல் என் கவியிருக்க ஆசைதான் குழந்தைக் கோபம் கொள்ள

"கைகொடுப்போம் வாருங்கள்."

கனவுகளின் உலகம்
கனவும், கற்பனையும் கொட்டிக் கிடக்கிறது நிஜங்கள் இன்று எதிலுமே இல்லை. மெய்யும், பொய்யும் கலந்தே உலகை ஆழ்கிறது.உண்மையை உணர்த்த கைகொடுப்போம் வாருங்கள்.பிரிவினை பூமியில் படர்ந்து விட்டது மொழியால், ஜாதியால், நிறத்தால்..பூமிக்கு புரிய வைத்து ஒற்றுமையை ஊக்குவிக்க கை கொடுப்போம் வாருங்கள்."அமைதியாய் வாழ்பவனை அடக்க நினைக்கிறான்" அகராதியை விட்டே அடிமையை துரத்த கை கொடுப்போம் வாருங்கள். வாழ்க்கைக்கு வழி காட்டிய பெற்றோர்கள் இன்று அன்றாட உணவுக்காய் வீதிகளில்.. அவர்களின் பசி போக்கி அன்பால் அரவணைக்க கை கொடுப்போம் வாருங்கள்.

உன்னைப் பிரிய மாட்டேன்.

கனவுகளின் உலகம்
கண்ணுக்குள் உன்னை வைத்து இமைகளை மூடுகிறேன், என் இரவின் கனாக்களிலும் நீ வர வேண்டும் என்று.. இதயத்துக்குள் நினைவுகளாய் நிரம்பிவிட்ட உன் ஞாபகங்கள், அத்துணை அணுக்களிலும் இரத்த ஓட்டமாய் கலந்து.. என் ஒவ்வொரு அசைவிலும் உன்னையே பிரதிபலிக்கிறது. அழகிய நினைவுகளும் நீ. அழகிய நிகழ்வுகளும் நீ. அழகிய என் நிதர்சனமும் நீ. என் காதோடு உன் குரல் கைபேசி வழியே ஊடுருவ.. உலகையே மறந்து போகிறேன், உனக்குள் என்னை புதைத்தவனாய். வழிகளில் விழி வருடி நீ செல்கின்ற நேரம்.. உன் மௌனத்துக்குள் உறைந்து விடுகிறேன், ...

"நல்லவனில்லை"

கனவுகளின் உலகம்
காதலே யார் நீ?ஆணையும், பெண்ணையும் இணைக்கும் பாலமா?அல்லது அவர்களைப் பிடித்த சாபமா?வாழ்வில் ஒளியூடுகிறாய் சில நேரம்.. வாழ்கையை எரிக்கிறாய் பல நேரம்.. மாறி மாறி உருவெடுக்கிராயே.. பச்சோந்தி பெத்த பிள்ளையா நீ?உன்னை வெறுத்தவர்கள் மணமேடையில் உறவாட, உன்னை அணைத்தவர்கள் பின மேடையில் வாடுவதா??உன் நியாயம் புரியாப் புதிராகிறதே..கனவுக்குள் கற்கண்டாய் இருக்கிறாய். பல கவிதைக்கும் கருவாய் இருக்கிறாய். செல்லாக் காசுகளையும் தங்கமாக்கி ஜொலிக்கிறாய். தோழனாய் சில நேரம் தோள் கொடுக்கிறாய்.கல்லறைக்குள் முதற் கல்லாய் இருக்கிறாய். கண

"வறுமைக் காற்று"

கனவுகளின் உலகம்
சோகமாய் சொல்லும் கவியிலும் சுவாரஸ்யம் உண்டு.ஏழையவன் வாழ்வைச் சொல்லுகையில் கண்ணீரே உண்டு. வறுமையின் வலையில் வசப்பட்டவனே வாழ்வினில் வலி சுமப்பவன்.தண்ணீரில் விழுந்த கற்கள் போல், வறுமைக் கண்ணீரில் மூழ்கிப் போனவன் அவன்.தீயுடன் உறவாடிய கைக் குழந்தை போல், நிஜத்துடன் உறவாடும் அவனும் என்றும் காயம் கண்டவனே...வறியவன் வாழ்வு பற்றிஇன்று அன்றாட அரசியல்.. நெஞ்சில் வருத்தமின்றிமேடையில் அவன் உணர்வுகள்..வியாபாரம் செய்கிறான் அரசியல்வாதி"ஐயோ..." அவனையே தலைவன் என்கிறான் அந்த அறியாவாதி.பக்கத்து வீட்டுப் பவித்திராவோ?பாலைவன ஆபிரிக

"அழாதே தாயே.."

கனவுகளின் உலகம்
"அழாதே தாயே.." ஒரு உவமை தேடுகிறேன் உன் கண்ணீர் வலி சொல்ல. ஒன்று கூட கிடைக்கவில்லை இந்த கவிப் பிரியனுக்கு. கோடிக் கண்கள் அழுகிறது உன் நிலை கண்டு. குருதியும் உறைந்து கிடக்கிறது உன் மண்ணின் துயர் கண்டு. "உன் தேசம் அழிகிறது என்று அழுகிறாயோ?"கண்ணீர் நிறுத்திக் கொள். கடைசி வரை நிலைக்கும் அது உன் மனதில் எழுதிக் கொள். "வழியனுப்பி வைத்த மகன் வரவில்லை என்று அழுகிறாயோ?"துயர் துடைத்துக் கொள், பல இலட்சம் உயிர்கள்; இன்று உன் மகனாய், நினைத்துக் கொள். உன் ...

"என் கரமே உன்னைக் கொல்லும்"

கனவுகளின் உலகம்
மரணப் பீதி காற்றோடுமனித தசைகள் அம் மண்ணோடு என் கரமும் கவியின் வரியோடு இரத்தம் வடிக்கிறது என் கண்ணோடுநோபல் பரிசுகள் எங்கே?மனித உரிமை குழுக்கள் எங்கே?ஐநா எங்கே? அமெரிக்கா எங்கே?உலகம் எங்கே? ஊடகம் எங்கே?சுதந்திரம் எங்கே? பாலஸ்தீன மக்களின் சுவாசம் எங்கே? பூமிக்குள் புதைந்த மாதுவின் கருகிய தேகத்துடன் கருகிவிட்டது மனிதம் அவள் கருவுக்கும் கல்லறை நிலை கண்டு கரைகிறது என் இதயம்வெள்ளைச் சிரிப்பில் என் உள்ளம் வென்ற ரோஜாக்கள் கரிக் கருப்பாய் காட்சி கொடுப்பதேனோ ?ஈனப் பிறவியான இதயக் கனிவற்ற கயவனின் வஞ்சகம் ...

என்னைக் கொன்று விடு..

கனவுகளின் உலகம்
சுவாசமாய் நினைத்து உன்னை சுவைத்து சுடுபட்டுப் போன நாட்கள் போதும் அன்பே.. காதல் தீயில் கருகிப்போன இதயத்துக்கு மருந்து போட்டே நகர்கிறது என் மற்றைய வினாடிகள்..தொடரும் நிழல் போன்று உன் நினைவும்.. உளி செதுக்கிய சிற்பமாய் உன் நாமமும்.. என்னோடு ஒட்டிக்கொண்டன.பாலைவனத்தில் பட்டமரமாய் உன்னை சுமந்து கொண்டு பரிதவித்து நிற்கிறேன்.. கொடிய வறட்சியிலும் நீ என்னுள் வற்றிப் போகவில்லை.என் கொடிய நிமிடங்களிலும் நான் உன்னை கழட்டி ஏறியவில்லை. ஒருமுறை நிதர்சனமான மரண வலியையும், ஒவ்வொரு வினாடியிலும் தந்து சென்றவள் நீ..பெண்ணே!உன்னிடம

தை பிறந்தால் வழி பிறக்கும்?

கனவுகளின் உலகம்
(சூரியன் fm இன் ரீங்கார நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட தலைப்பில் எழுதப்பட்ட கவிதை இது. இவ்வருடத்தின் முதல் பதிவு என்பதால் இந்த கவிதை உங்கள் இவ் வருட சிந்தனைக்காகவும்..) வலிகள், வதைகள், கொடுமைகள், கொடூரங்கள்...இவர்களின் வாழ்வாகிப் போனது.விலை மதிப்பற்ற செல்வம் கல்விக்காய்..புத்தக மூட்டை சுமக்க வேண்டிய வயதில்,அன்றாட பசி போக்க சில சில்லறை காசுகளுக்காய்.. சுமை மூட்டைகள் இவர்களின் முதுகில். வறுமையையும், பசியையும் வாங்கிக் கொண்டு இவர்கள் இழந்தது ஏராளம்.கனவுகள் இல்லை,கல்வியில்லை, கருணையில்லை, உடையில்லை, உறவில்லை,உறைவி

உன்னைப் பிரியமாட்டேன்!!

கனவுகளின் உலகம்
கண்ணுக்குள் உன்னை வைத்து இமைகளை மூடுகிறேன். என் இரவின் கனாக்களிலும் நீதான் வரவேண்டுமென்று.. இதயத்துக்குள் நினைவுகளாய் நிரம்பிவிட்ட உன் ஞாபங்கள்..அத்துணை அணுவிலும் இரத்த ஓட்டமாய் கலந்து என் ஒவ்வொரு அசைவிலும் உன்னையே பிரதிபலிக்கிறது. அழகிய நினைவுகளும் நீ,அழகிய நிகழ்வுகளும் நீ,அழகிய எதிர்காலமும் நீ..என் காதோரமாய் கைபேசியில் நீ பேசுகையில்.. உலகையே மறந்து போகிறேன் உன்னை மட்டும் நினைத்தவனாய்.. கூட்டமாய் நீ வருகையில் கண்களால் உன்னோடு கதை பேசி.. மௌனத்துக்குள் உறைந்து விடுகிறேன் கண்களை மட்டும் அசைத்தவனாய்.. எந் நேர

புரண்டு போன பூமி.

கனவுகளின் உலகம்
அன்று, உழைப்பவனின் உழைப்பை மதிப்பிடத்தான் பணம். இன்று, உறவுகளின் பாச அளவீட்டுக் கருவியை மாறிப் போனது இந்தப் பிணம்.முயற்சிக்கு முன்னுரிமை இருந்தது அன்று.அதிஷ்டத்துக்குள் பூமிமூழ்கிப்போனதால்,முயற்சிப்பவன் எல்லாம் மூச்சடைகிறான் இன்று.உறவுகளுக்கும், உயிரோட்டமில்லை.முயற்சிக்கும்,முன்னுரிமையில்லை.உறவுகளில்உயிரோட்டம் இருந்தால், (இன்று)தாயை தள்ளிவைக்கமாட்டான் பிள்ளை. முயற்சியே முதல் என்றால், என்றோ முன்னேரியிருப்பான். மீனவனுடன் விவசாயி??அசாத்தியத்தை சாத்தியமாக்கி விட்ட உலகம், சாத்தியத்தை இன்று அசாத்தியம் என்கிறது. த

கருவி ஒன்றை கண்டுபிடி!

கனவுகளின் உலகம்
(சூரியன் fm இன் ரீங்காரம் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட தலைப்புக்கு எழுதப்பட்டு 23 /11 /2011 அன்று வாசிக்கப்பட்ட கவிதை) கரைந்து விட்டது நேற்றைய பொழுதுகள்.கருகிக்கொண்டிருக்கிறது இன்றைய நிஜங்கள்.முன்நோக்கி நகர்கிறது நாளைய நிகழ்வுகள். உலகம் இயங்கும் வேகத்திற்கு, ராகட் கூட இரண்டாம் பட்சம்தான். உலகின் சுழலுக்கு ஈடுகொடுத்து, பசுமை நினைவுகளை எனக்குப் படம் போட்டுக் காட்ட, கண்டுபிடி ஒரு கருவி. இழந்தது எனக்கு வேண்டும், மீண்டும்...என் காதோரம் கதை சொல்லும் பாட்டி, நான் தூங்கிய தாய்மடி,பசுமையான பாடசாலை நாட்கள், பழகிப் பிர

மரணித்து விட்டது மனிதம்

கனவுகளின் உலகம்
காலத்தின் கட்டளைக்குள் கட்டுண்டு போன நாம், அக் காலத்தை விட வேகமாய் ஓடுகின்றோம். எதற்காய் ஓடுகின்றோம்? எதுவுமே நிலையில்லா இவ்வுலகில்எதை நிலையாக ஓடுகின்றோம்?நான்?நீங்கள்?நம் குடும்பம்?மனித உயிர்?பணம்?பாசம்?ஆசை?காதல்?இதில் எது நிலையானது?வானம்?அதில் தோன்றும் நிலவு?கடலை பிழக்கும் சூரியன்?ஓயாமல் அடிக்கும் அலை?அந்த அலை தந்த நுரை?இதில் எதை சொல்ல முடியும்நிலையானது என்று?பணத்தை நோக்கி ஒரு கூட்டம், பாசத்தை நோக்கி ஒரு கூட்டம், அறிவை தேடி ஒரு கூட்டம், ஆகாரத்தை தேடி ஒரு கூட்டம்.. இப்படி ஓடிக்கொண்டே இருக்கிறதுநம் வாழ்வும்

இதமாய் ஓர் ராகம்!

கனவுகளின் உலகம்
அமைதியைத் தத்தெடுத்து ஆதரிக்கிறது இரவு. மூடப்படாத இமைகளோடு, பின்னிரவில்.. தனிமையாய் நான். இனிமையான இரவில், இதமாய் ஓர் ராகம் தூரத்திலிருந்து,என்னை தொட்டுச் செல்கிறது.காற்றுக்கு வசப்பட்ட அவ்விசை, என் காதுக்கு வந்து போகும் நேரம்... என் மூளையில் புதைந்த உன் நினைவோடு முட்டிச் செல்கிறது. என்றோ தொலைத்த உன்னை இன்று அருகாமையில் தேடுகிறது, என் இதயம். என்னை மோதும் மழைச் சாரலாய், என்னை அணைக்கும் குளிர்த் தென்றலாய், என்னை வருடும் இதமான இசையாய், இன்றும் என்னுள் வசிப்பவள் நீதான்.அழ நினைக்கும் கண்களிடம் இதயம் சொல்கிறது. "வ

விடையை தேடுங்கள் உறவுகளே!

கனவுகளின் உலகம்
சோகமாய் சொல்லிச் செல்லும் கவிகளில் கூட, சில சுவாரஸ்யம் இருக்கும். ஏழை என்று பிறந்தவன்,வாழ்வு பற்றி சொல்லும் போதுஎன்னதான் இருக்கும்?வறுமையின் வலைக்குள் வசப்பட்டவர்கள்தான், வாழ்கையில் நிர்பந்திக்கப்பட்டவர்கள். ஆற்றுக்குள் எறியப்பட்ட கற்கள் போல், மூச்சுத்திணறி மூழ்கிப் போனார்கள், காலத்தின் கல்லறைக்குள்.நெருப்போடு விளையாடும் கைக்குழந்தை போல், நிஜத்தோடு போராடும் அவர்கள், என்றும் காயப்பட்டவர்களே!. அரசியல் மேடையில் தீனியாய் மாற்றப்பட்டுவிட்டது, இந்த ஏழையின் வறுமை வாழ்க்கை. அவை கேட்டு கைகொட்டிச் சிரித்தே, பழகி விட்