இனி இலங்கைக்கு என்ன நடக்கும்? (சனல் 4 அண்மையில் வெளியிட்ட யுத்தக்குற்ற ஆதாரங்களின் தொகுப்புக் காணொளியின் பின்...)
என்.கே.அஷோக்பரன்உலகே அதிர்ந்து போனது.... காணொளியைப் பார்க்க முடியாது வேதனையில் எழுந்து சென்று விட்டவர்கள் பலர், காணொளியைக் கண்டபின்னர் தூக்கத்தைத் தொலைத்தவர்கள் பலர்,காணொளியைக் காணும் போதே தம்மையறியாமலேயே கண்ணீர் சிந்தியவர்கள் பலர். இது போலெல்லாம் உலகில் நடக்குமா? என்று யோசித்திருந்தவர்கள், இலங்கையிலே அதுவும் நமது இனமக்களுக்கு நடந்த இந்தக் கொடூரத்தைக் கண்டு தாங்கிக்கொள்ள முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள். பல காணொளிகள் முன்பே வெளிவந்திருந்தாலும், இந்த தொகுப்பைக் காணும் போது நெஞ்சு கனக்கிறது... மனது “நீதி வ