இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ஊதிய அதிகரிப்பு

63

இலங்கை கிரிக்கெட் அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் வீரர்களுக்கு உடனடி அமுலுக்கு வரும் வகையில் ஊதிய அதிகரிப்பு வழங்கப்பட்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அறிவித்துள்ளது.  

டிக்வெல்ல, அவிஷ்கவின் பிரகாசிப்புடன் SLC டீம் ரெட் அணிக்கு வெற்றி 

அதன்படி மொத்தமாக 41 வீரர்கள் ஆறு பிரிவுகளில் (A1, A2, B2, C1, C2 மற்றும் ‘A’ அணிஉள்வாங்கப்பட்டு புதிய ஒப்பந்தத்தினை பெற்றிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை இன்று (10) வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது 

அதேநேரம் இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டிகளுக்காக வழங்கப்படும் ஊதியத் தொகை இரட்டிப்பாக்கப்பட்டிருப்பதோடு டெஸ்ட் போட்டிகளின் முடிவுகளுக்கு அமையவும் வீரர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படும் எனக் கூறப்பட்டிருக்கின்றது 

இதேவேளை இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுக்காக ஒருநாள் மற்றும் T20I போட்டிகளில் வழங்கப்படும் ஊதியத் தொகை 25% இனால் அதிகரிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது 

இவை ஒரு பக்கமிருக்க இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தரவரிசைகளில் (ICC Rankings) சிறந்த நிலைகளைப் பெறும் சந்தர்ப்பத்தில் அதற்காகவும் ஊக்கத் தொகையினைப் பெறுவார்கள் எனவும் கூறப்பட்டிருக்கின்றது. அத்துடன் தேசிய அணி வீரர்களுக்கான நாளாந்த கொடுப்பனவும் (Dialy Allowance) அதிகரிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது 

இலங்கை கிரிக்கெட் சபையின் ஒப்பந்தத்தினை பெறும் வீரர்கள் பட்டியல்

 >>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<