டிக்வெல்ல, அவிஷ்கவின் பிரகாசிப்புடன் SLC டீம் ரெட் அணிக்கு வெற்றி

SLC T20 World Cup Preparation Matches

53
SLC T20 World Cup Preparation Matches

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் ஐசிசி T20 உலகக்கிண்ணத்துக்கான பயிற்சிப் போட்டித் தொடரில் இன்று (10) நடைபெற்ற SLC டீம் கிரீன் அணிக்கு எதிரான போட்டியில் SLC டீம் ரெட் அணி 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

கொழும்பு ஆர்.பிரேமாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய SLC டீம் ரெட் அணி நிரோஷன் டிக்வெல்ல மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோரின் சிறந்த ஆரம்ப துடுப்பாட்ட இணைப்பாட்டத்தின் உதவியுடன் 212/6 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

>>T20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை குழாம் அறிவிப்பு<<

நிரோஷன் டிக்வெல்ல 32 பந்துகளில் 69 ஓட்டங்களை விளாசியதுடன், அவிஷ்க பெர்னாண்டோ 30 பந்துகளில் 52 ஓட்டங்களை பெற்றார். இவர்களையடுத்து கமிந்து மெண்டிஸ் 23 ஓட்டங்களையும், சுன் ஷானக 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் தரிந்து ரத்நாயக்க 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய SLC டீம் கிரீன் அணிக்கு குசல் ஜனித் பெரேரா சிறந்த ஆரம்பத்தை கொடுத்த போதும், ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை குவிக்க தவறியிருந்தனர்.

குசல் பெரேரா 30 பந்துகளில் 57 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழக்க, பின்வரிசையில் களமிறங்கிய ரமேஷ் மெண்டிஸ் 31 பந்துகளில் 46 ஓட்டங்களை பெற்றார். எனினும் டீம் கிரீன் அணியால் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது. பந்துவீச்சில் சரித் அசலங்க மற்றும் தசுன் ஷானக ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

சுருக்கம்

SLC டீம் ரெட் – 212/6 (20), நிரோஷன் டிக்வெல்ல 69, அவிஷ்க பெர்னாண்டோ 52, தரிந்து ரத்நாயக்க 2/28

 

SLC டீம் கிரீன் – 174/7 (20), குசல் பெரேரா 57, ரமேஷ் மெண்டிஸ் 46, தசுன் ஷானக 2/18, சரித் அசலங்க 2/22

 

முடிவு – SLC டீம் ரெட் அணி 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

 >> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<