நடுவர் தீர்ப்பை மதிக்க தவறிய சஞ்சு சாம்சனுக்கு அபாரதம்

40

நேற்று (07) நடைபெற்று முடிந்த இந்திய பிரீமியர் லீக் (IPL) போட்டியில் நடத்தை விதிகளை மீறிய குற்றச்சாட்டில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவர் சஞ்சு சாம்சனுக்கு அபாரதம் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

T20 உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடர் சம்பியன்களான இலங்கை மகளிர் 

நேற்றைய IPL போட்டியில் டெல்லி கெபிடல்ஸ் அணியானது, ராஜஸ்தான் ரோயல்ஸ் வீரர்களை எதிர்கொண்டிருந்தது. இந்தப் போட்டியில் வெற்றி இலக்காக டெல்லி கெபிடல்ஸ் அணியின் மூலம் 222 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது 

இந்த நிலையில் போட்டியின் வெற்றி இலக்கை அடைய துடுப்பாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக களத்தில் இருந்த சஞ்சு சாம்ஷன் 16ஆவது ஓவரில் முகேஷ் குமார் வீசிய பந்தினை சிக்ஸருக்கு விளாசினார். எனினும் பௌண்டரி எல்லையில் இருந்து சஞ்சு சாம்சன் அடித்த பந்தினை சாய் ஹோப் பிடியெடுத்திருந்தார் 

இந்த பிடியெடுப்பு மூன்றாம் நடுவர் மூலம் பரிசோதிக்கப்பட்டு அது ஆட்டமிழப்பு என அறிவிக்கப்பட்டது. எனினும் இந்த ஆட்டமிழப்பிற்காக மைதான நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சஞ்சு சாம்சன் தற்போது தனது போட்டிக்கட்டணத்தில் 30% இணை அபராதமாக செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார். அதேநேரம் சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்கும் போது 6 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 86 ஓட்டங்கள் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. சாம்சன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விடயங்கள் ஒரு பக்கம் காணப்பட கிரிக்கெட் இரசிகர்களிடையே மூன்றாம் நடுவரின் தீர்ப்பிற்கு எதிராக விமர்சனங்களும் உருவாகியிருக்கின்றன 

ஆப்கான் A அணியுடனான கடைசிப் போட்டியிலும் இலங்கை தோல்வி

சாம்சனின் சர்ச்சைக்குரிய ஆட்டமிழப்பினைத் தொடர்ந்து போட்டியில் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட ஓட்டங்களை அடைய சிறந்த வாய்ப்புக்களை கொண்டிருந்த ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் தோல்வியினைத் தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<