ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரையில் சமரி

ICC Awards

43

ஐசிசியின் ஏப்ரல் மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித்தலைவி சமரி அத்தபத்து பெயரிடப்பட்டுள்ளார். 

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீர வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறதுஇதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் சிறப்பாக செயல்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி நேற்று (06) வெளியிட்டுள்ளது. 

அதன்படி மே மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் பாகிஸ்தானின் ஷஹீன் அப்ரிடி, ஐக்கிய அரபு இராச்சியம் அணியின் மொஹமட் வசீம் மற்றும் நமீபியா அணியின் கெஹார்ட் எராஸ்மஸ் ஆகிய மூவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் 

அதன்படி, நியூசிலாந்து அணிக்கு எதிரான T20i தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷஹீன் அப்ரிடி 8 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், தொடர் நாயகன் விருதை வென்றார். 

அதேபோல் நமீபியா அணியின் எராஸ்மஸ் ஓமான் அணிக்கு எதிரான T20i தொடரில் 8 விக்கெட்டுகளையும், 145 ஓட்டங்களையும் குவித்ததுடன் தொடரை கைப்பற்றவும் முக்கிய காரணமாக அமைந்தார். அத்துடன், இத்தொடரில் அபாரமாக விளையாடிய எராஸ்மஸ் இரண்டு போட்டிகளில் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார். மேலும், ஐக்கிய அரபு இராச்சியம் அணியின் தலைவர் மொஹமட் வசீம் ஏசிசி பிரீமியர் கிண்ணத் தொடரில் அபாரமாக செயல்பட்டதன் மூலம் இப்பட்டியலில்

அதேபோல, ஏப்ரல் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதிற்கான பரிந்துரைப் பட்டியலில் இலங்கை அணியின் தலைவி சமரி அத்தபத்து, தென்னாபிரிக்கா அணியின் தலைவி லாரா வோல்வார்ட் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவி ஹெய்லி மெத்யூஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் லாரா வோல்வார்ட் மற்றும் சமரி அத்தபத்து ஆகிய இருவரும் தென்னாபிரிக்காஇலங்கை தொடரில் அபாரமாக விளையாடி ஓட்டங்களைக் குவித்தனர். 

சமரி அத்தபத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதை தட்டிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.    

அதேசமயம் மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவி ஹெய்லி மெத்யூஸ் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அசத்தியதுடன், தொடர் நாயகி விருதையும் வென்று அசத்தினார். இதன்மூலம் இவர்கள் மூவரது பெயரும் பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. 

எனவே, ஐசிசி இனால் பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த வீரர்களில் அதிக வாக்குகள் பெறும் வீரர் மற்றும் வீராங்கனைக்கு ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருது வழங்கப்படும். 

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<