இலங்கை கிரிக்கெட்டுடன் இணைந்து பணியாற்றவுள்ள வசீம் அக்ரம்!

66

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வசீம் அக்ரம் இலங்கை தேசிய அணியின் வீரர்கள், உயர் செயற்திறன் மைய பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் மேஜர் கழக பயிற்றுவிப்பாளர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம் ஒன்றை வழங்கவுள்ளார்.

நேற்று (01) காலை இலங்கை வந்துள்ள இவர் இலங்கை தேசிய அணியின் வீரர்கள், உயர் செயற்திறன் மைய பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் மேஜர் கழக பயிற்றுவிப்பாளர்களுக்க ஐந்து கட்டமாக பயிற்சிகளை வழங்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிகளுடன் T20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் இலங்கை மகளிர்

அதேநேரம் T20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை அணியுடன் இநை்து அவர்களுடைய தயார்படுத்தல்களையும் வசீம் அக்ரம் கவனிக்கவுள்ளார்.

இலங்கை உயர் செயற்திறன் மையம் மற்றும் மேஜர் கழக பயிற்சிகளின் வலிமையை மேம்படுத்துவதற்கு தேவையான நிபுணத்துவத்தை கொண்டு வருவதற்காக இலங்கை கிரிக்கெட் இந்த பயிற்சி முகாமை ஏற்பாடு செய்துள்ளது.

வசீம் அக்ரமை அழைத்து வருவதற்கான நடவடிக்கையை இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகக்குழு மற்றும் தலைவர் சம்மி சில்வா ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.

வசீம் அக்ரம் தன்னுடைய பயிற்சி முகாமை இன்றைய தினம் (02) ஆரம்பிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<