வெற்றிகளுடன் T20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் இலங்கை மகளிர்

49
SL Women vs Uganda Women

2024ஆம் ஆண்டுக்கான மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடரின் எஞ்சிய அணிகளை தெரிவு செய்ய நடைபெற்று வரும் தகுதிகாண் தொடரில் உகண்டாவை எதிர்கொண்ட இலங்கை மகளிர் வீராங்கனைகள் 67 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளனர். 

>> T20 உலகக் கிண்ண அணியை அறிவித்த அவுஸ்திரேலியா

மேலும் இந்த வெற்றியுடன் மகளிர் T20 உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடரில் மூன்றாவது தொடர் வெற்றியை இலங்கை பதிவு செய்துள்ளது. 

உகண்டாஇலங்கை மகளிர் அணிகள் மோதிய போட்டி நேற்று (03) அபுதாபியில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை வீராங்கனைகள் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்ததோடு, 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்கள் எடுத்தனர். 

இலங்கைத் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக ஆரம்ப வீராங்கனையாக களம் வந்த விஷ்மி குணரட்ன 64 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பெளண்டரிகள் அடங்கலாக 73 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காது இருந்தார். மறுமுனையில் உகண்டா பந்துவீச்சில் ஜனேட் பாபஸி, முசமலி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சுருட்டினர். 

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 155 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய உகண்டா அணியானது 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 87 ஓட்டங்களுடன் போட்டியில் தோல்வியினைத் தழுவியது. 

உகண்டா அணியின் துடுப்பாட்டத்தில் ப்ரோஸ்கோவியா அலாஸ்கோ 36 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பில் கூடுதல் ஓட்டங்களைப் பதிவு செய்தார். இலங்கை பந்துவீச்சில் இனோக்கா ரணவீர, சஷினி கிம்ஹானி மற்றும் கவீஷா டில்ஹாரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர். 

போட்டியின் ஆட்டநாயகியாக விஷ்மி குணரட்ன தெரிவாகியிருந்தார். 

போட்டியின் சுருக்கம் 

இலங்கை – 154/4 (20) விஷ்மி குணரட்ன 73(64)*, ஜனேட் பாபாஸ்ஸி 19/1

 

உகண்டா – 87 (19.2) ப்ரோஸ்கோவியா 36, இனோக்கா ரணவீர 10/2  

 

முடிவு – இலங்கை 67 ஓட்டங்களால் வெற்றி  

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<