விராட் கோஹ்லிக்கு அபராதம் விதித்த BCCI

IPL 2024

39
Virat Kohli

இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடி வரும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் விராட் கோஹ்லிக்கு இந்திய கிரிக்கெட் சபை (BCCI) அபராதம் விதித்துள்ளது. 

கொல்கத்தா நைட் ரைடர்ஷ் அணிக்கு எதிரான போட்டியில்  நடுவருடன் முரண்பட்ட காரணத்துக்கான விராட் கோஹ்லிக்கு போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

>> IPL போட்டிகளில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்களுக்கு அபராதம்

கொல்கத்தா நைட் ரைடர்ஷ் அணிக்கு எதிரான போட்டியில் 7 பந்துகளில் 18 ஓட்டங்களை விளாசிய விராட் கோஹ்லி ஹர்ஷித் ராணாவின் பந்துவீச்சில் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 

குறித்த பந்து நோ போல் பந்து என முறையிடப்பட்ட நிலையில், பந்தினை ஆராய்ந்த மூன்றாவது நடுவர் நோ போல் இல்லை என குறிப்பிட்டு ஆட்டமிழப்பு என முடிவை அறிவித்தார். 

மூன்றாவது நடுவரின் இந்த தீர்ப்பினையடுத்து கோபத்துடன் களத்திலிருந்து வெளியேறிய விராட் கோஹ்லி, கள நடுவருடன் முரண்பட்டுக்கொண்டார். 

எனவே போட்டிக்கு பின்னனர் நடைபெற்ற விசாரணையில் விராட் கோஹ்லி குற்றத்தை ஒப்புக்கொண்டதன் காரணமாக அவரின் போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது. 

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது கொல்கத்தா அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் ஒரு ஓட்டத்தால் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<