டோனியை தாமதமாக களமிறக்குவதற்கான காரணம் என்ன? கூறும் பயிற்றுவிப்பாளர்!

39
MS Dhoni

சென்னை சுபர் கிங்ஸ் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் டோனி தாமதமாக துடுப்பெடுத்தாடுவதற்கான காரணத்தை அணியின் பயிற்றுவிப்பாளர் ஸ்டீபன் பிளெமிங் வெளியிட்டுள்ளார். 

டோனி இந்த ஆண்டு அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகியிருந்தாலும், இன்னிங்ஸின் இறுதி ஓவர்களில் அதிரடியாக துடுப்பெடுத்தாடி வருகின்றார். 

>> சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகும் முக்கிய வீரர்

குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் கடைசி ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசியிருந்தார். இறுதியாக லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 9 பந்துகளில் 28 ஓட்டங்களை விளாசினார். 

இவ்வாறான நிலையில் டோனி ஏன் தாமதமாக களமிறக்கப்படுகின்றார் என்ற கேள்விகள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அதற்கான காரணத்தை ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார். 

டோனியின் திறமையை நாம் பயிற்சியில் பார்த்தோம். அவருடைய திறமையில் எந்தவித குறைகளும் இல்லை. பயிற்சியில் கூட அற்புதமாக ஆடினார். அதனால் அவருடைய பிரகாசிப்பை பார்த்து நாம் ஆச்சரியமடையவில்லை. 

எனினும் அவருடைய முழங்கால் உபாதை அவர் களத்திலிருக்கும் நேரத்தை கட்டுப்படுத்துகிறது. எனவே நாம் கடைசி 3 ஓவர்களில் அவரை துடுப்பெடுத்தாட வைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்எனவே முன்வரிசை வீரர்கள் சிறந்த ஆரம்பத்தை கொடுக்கும் பட்சத்தில் அவரால் வேகமாக ஆட முடியும். அதனை அத்தனை தடவைகளும் செய்வதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.” என்றார். 

சென்னை சுபர் கிங்ஸ் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<