பாகிஸ்தான் T20I அணிக்கு திரும்பும் மொஹமட் ஆமிர்!

New Zealand tour of Pakistan 2024

48

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான பாகிஸ்தான் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாபர் அஷாம் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் குழாத்தில் பல முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் முக்கிய மாற்றங்களாக நீண்ட இடைவெளிக்கு பின்னர் மொஹமட் ஆமிர் மற்றும் இமாட் வசீம் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். 

பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக மாறும் அஷார் மஹ்மூட்

மொஹமட் ஆமிர் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான T20I தொடரில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியிருந்தார். தற்போது 4 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தேசிய அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். 

அதேநேரம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடியிருந்த இமாட் வசீம் மீண்டும் பாகிஸ்தான் T20I குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார். மொஹமட் ஆமிர் மற்றும் இமாட் வசீம் ஆகியோர் அவர்களுடைய அனுபவங்களை கருத்திற்கொண்டு அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர். 

இவர்களை தவிர்த்து அணித்தலைவராக செயற்பட்டிருந்த முன்னணி வீரர் சஹீன் ஷா அப்ரிடி, சதாப் கான், இப்திகார் அஹ்மட், மொஹமட் ரிஸ்வான் மற்றும் பக்ஹர் ஷமான் ஆகியோரும் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். 

அதுமாத்திரமின்றி ஷமான் கான், உசாமா மிர், சயீம் ஆயுப் மற்றும் இர்பான் கான் ஆகிய இளம் வீரர்களும் பாகிஸ்தான் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். 

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான T20I  தொடர் ஏப்ரல் 18ம் திகதி முதல் ஏப்ரல் 27ம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பாகிஸ்தான் குழாம் 

 

பாபர் அஷாம் (தலைவர்), அப்ரர் அஹ்மட், அஷாம் கான், பக்ஹர் ஷமான், இப்திகார் அஹ்மட், இமாட் வசீம், அபாஸ் அப்ரிடி, மொஹமட் ரிஸ்வான், மொஹமட் ஆமிர், இர்பான் கான், நசீம் ஷா, சஹீன் ஆயுப், சதாப் கான், சஹீன் அப்ரிடி, உஸாமா மிர், உஸ்மான் கான், ஷமான் கான் 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<