LPL தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது!

48

இலங்கையில் எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான முழுமையான போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் முதலாம் திகதி நடப்பு சம்பியன்  பி லவ் கண்டி அணி தம்புள்ள ஓரா அணியை எதிர்த்தாடுகிறது. இந்தப் போட்டியானது கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகின்றது. 

>> ICC இன் மார்ச் மாதத்திற்கான சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரராக கமிந்து

முதல் மூன்று போட்டிகள் கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், அதனைத்தொடர்ந்து 5 போட்டிகள் தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன. 

குறித்த போட்டிகளை தொடர்ந்து  பிளே-ஓஃப் போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டி என்பன கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன. 

மொத்தமாக ஐந்து அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி தொடரில் 24 போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், போட்டிகள் ஜூலை முதலாம் திகதி முதல் 21ம் திகதிவரை நடைபெறவுள்ளன.  இதில் இறுதிப்போட்டிக்கான மேலதிக நாளாக 22ம் திகதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

போட்டி அட்டவணை

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<