IPL தொடரினை முழுமையாக தவறவிடும் வனிந்து ஹஸரங்க

106
Hasaranga skips IPL to nurse troubled hee

இலங்கை T20I அணியின் தலைவராக செயற்படும் வனிந்து ஹஸரங்க இந்த ஆண்டுக்கான இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரில் முழுமையாக ஆட மாட்டார் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>> இலங்கை டெஸ்ட் குழாத்தில் மீண்டும் வனிந்து ஹஸரங்க!

நட்சத்திர சகலதுறைவீரரான வனிந்து ஹஸரங்கவிற்கு அவருடைய இடது குதிகாலில் ஏற்பட்டிருக்கும் உபாதையே அவர் IPL தொடரில் ஆடாமல் போவதற்கு முக்கிய காரணம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

வனிந்து ஹஸரங்க இந்தப் பருவத்திற்கான IPL தொடரில் சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் அணியினால் இந்திய நாணயப்படி 1.5 கோடி ரூபாய்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அத்துடன் அவர் சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் அணியின் பிரதான பந்துவீச்சாளர்களில் ஒருவராகவும் காணப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலையே வனிந்து ஹஸரங்க இம்முறை IPL தொடரில் ஆட முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. வனிந்து ஹஸரங்க IPL தொடரில் ஆடாத விடயத்தினை இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரி (CEO) ஏஷ்லி டி சில்வா வாயிலாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

அதேவேளை உபாதைக்குள்ளான வனிந்து ஹஸரங்க மேலதிக சிகிச்சைகளை பெறும் பொருட்டு ஐக்கிய அரபு இராச்சியம் பயணமாகுவார் எனவும் கூறப்பட்டிருக்கின்றது.

இதேவேளை வனிந்து ஹஸரங்க உபாதையில் இருந்து மீளத் திரும்பிய பின்னர் இந்த ஆண்டு ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளில் நடைபெறும் T20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியினை வழிநடாத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

செய்தி மூலம் – Sunday Times

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<