இலங்கை A – ஆப்கான் A தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது!

Afghanistan A Tour of Sri Lanka 2024

83

சுற்றுலா ஆப்கானிஸ்தான் A மற்றும் இலங்கை A அணிகளுக்கு இடையிலான போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது 

இலங்கை A கிரிக்கட் அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், ஒரு நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியிலும் கலந்து கொள்வதற்காக ஆப்கானிஸ்தான் A அணி எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கை வருகை தரவுள்ளது. 

அதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி முதல் மே மாதம் 7ஆம் திகதி வரை 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. இந்த 5 போட்டிகளும் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது 

அதனைத் தொடர்ந்து நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி மே மாதம் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை கொழும்பு பி.சரா ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

போட்டி அட்டவணை 

  • முதலாவது ஒருநாள் போட்டிஏப்ரல் 28 – ஹம்பாந்தோட்டை 
  • 2ஆவது ஒருநாள் போட்டிஏப்ரல் 30 – ஹம்பாந்தோட்டை 
  • 3ஆவது ஒருநாள் போட்டிமே 03 – ஹம்பாந்தோட்டை 
  • 4ஆவது ஒருநாள் போட்டிமே 05 – ஹம்பாந்தோட்டை 
  • 5ஆவது ஒருநாள் போட்டிமே 07 – ஹம்பாந்தோட்டை 

ஒற்றை நான்கு நாட்கள் டெஸ்ட் போட்டிமே 11 முதல் 14 வரைகொழும்பு பி. சாரா ஓவல் 

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<