வளர்ந்துவரும் மகளிர் ஆசியக்கிண்ணத்துக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

Womens Emerging team Asia Cup 2023

132

வளர்ந்துவரும் மகளிர் அணிகளுக்கு இடையிலான ஆசியக்கிண்ண தொடருக்கான 14 பேர்கொண்ட இலங்கை A குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை A குழாத்தின் தலைவியாக சத்யா சந்தீபனி நியமிக்கப்பட்டுள்ளதுடன், உப தலைவியாக மல்ஷா செஹானி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த LPL இல் புதிய உரிமையாளர்களுடன் கண்டி அணி

இலங்கை கிரிக்கெட் சபை பெயரிட்டுள்ள இந்த குழாத்துக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அனுமதியை வழங்கியுள்ளார்.

வளர்ந்துவரும் மகளிர் அணிகளுக்கு இடையிலான ஆசியக்கிண்ண தொடருக்காக இலங்கை அணி வெள்ளிக்கிழமை (09) ஹொங் கொங் பயணிக்கிறது.

மொத்தமாக 8 அணிகள் பங்கேற்கும் குறித்த இந்த தொடர் எதிர்வரும் 12ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இலங்கை அணி ஐக்கிய அரபு இராச்சியம், பங்களாதேஷ் மற்றும் மலேசியா அணிகளை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை குழாம்

சத்யா சந்தீபனி, மல்ஷா செஹானி, விஷ்மி குணரத்ன, உமேஷா திமாஷினி, இமேஷா டுலானி, பியூமி வத்சலா, சச்சினி நிசன்சலா, கசுனி நுத்யங்கனா, தாரிகா செவ்வந்தி, நிமேஷா மதுசானி, நிலக்ஷனா சந்தமினி, மதுசிகா மெத்தானந்த, ரஷ்மி சில்வா, தெவ்மி விஹங்கா

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<