ஆப்கானிஸ்தான் தொடரிலிருந்து வெளியேறும் மஹ்மதுல்லாஹ்

Afghanistan tour of Bangladesh 2023

107

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்களாதேஷ் அணியின் அனுபவ வீரர் மஹ்மதுல்லாஹ் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹ்மதுல்லாஹ் ஹஜ் யாத்திரைக்கு செல்லவுள்ள காரணத்தால் ஆப்கானிஸ்தான் தொடரிலிருந்து விலகுவதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபையிடம் கோரியுள்ளார்.

ஐந்தாவது முறையாக ஐ.பி.எல். கிண்ணத்தை சுவீகரித்த சென்னை சுபர் கிங்ஸ்

எனவே ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில் மஹ்மதுல்லாஹ் விளையாட மாட்டார் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளதுடன், T20 போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மஹ்மதுல்லாஹ் அணியிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், அவருடைய உலகக்கிண்ண தொடருக்கான வாய்ப்பில் சிக்கல் எழுந்துள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது உலகக்கிண்ண தொடருக்கான தங்களுடைய அணியை இறுதிப்படுத்தும் பணிகளில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஈடுபட்டு வருகின்றது. அதற்காக வீரர்களை தயார்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட இந்த தொடரின் மூலம் ஆசியக்கிண்ணத்துக்கான குழாத்தை தெரிவுசெய்து அதிலிருந்து உலகக்கிண்ணத்துக்கான குழாம் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் மஹ்மதுல்லாஹ் ஒருநாள் தொடரிலிருந்து வெளியேறினால் அவரால் உலகக்கிண்ணத்துக்கான குழாத்தில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் T20i தொடர்கள் ஜூலை 5 முதல் ஜூலை 16ம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>  மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<