Home Tamil முதல் போட்டியில் ஜப்பானை வீழ்த்திய இலங்கை இளையோர்

முதல் போட்டியில் ஜப்பானை வீழ்த்திய இலங்கை இளையோர்

Sri Lanka Emerging Team tour of Japan 2023

886
Sri Lanka Emerging Tour of Japan 2023

ஜப்பான் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் T20 போட்டியில் இலங்கை வளர்ந்துவரும் அணி டெலோன் பீரிஸின் சகலதுறை பிரகாசிப்பின் உதவியுடன் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

சனோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜப்பான் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.

>> தசுன் ஷானக அமெரிக்காவில் கிரிக்கெட் ஆட ஒப்பந்தம்

முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியிருந்த ஜப்பான் அணி ஆரம்பம் முதல் ஓட்டங்களை பெறுவதற்கு தடுமாறியது. ஓட்டவேகத்தை அதிகரிக்க முடியாமல் துடுப்பாட்ட வீரர்கள் ஆட்டமிழக்க அவ்வணி 20 ஓவர்கள் முழுமையாக ஆடியும், 6 விக்கெட்டுகளை இழந்து 97 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

ஜப்பான் அணியின் சார்பாக மத்தியவரிசையில் கெண்டோல் கடோவகி பிளெமிங் அதிகபட்சமாக 21 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற மார்கஸ் துர்கேட் மற்றும் ரியோ சகுரனோ ஆகியோர் தலா 14 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் அணித்தலைவர் டெலோன் பீரிஸ் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பின்னர் இலகுவான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை வளர்ந்துவரும் அணி ஆரம்பத்தில் சற்று தடுமாற்றத்தை காட்டியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் துனித் ஜயதுங்க 18 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த போதும், சிதார ஹபுஹின்ன மற்றும் செஹான் பெர்னாண்டோ ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தனர்.

ஒருகட்டத்தில் இலங்கை அணி 50 ஓட்டங்களுக்கு தங்களுடைய முதல் 5 விக்கெட்டுகளையும் இழந்தது. எவ்வாறாயினும் ரன்மித் ஜயசேன (25 ஓட்டங்கள்) மற்றும் டெலோன் பீரிஸ் (17 ஓட்டங்கள்) ஆகியோர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

எனவே 15.3 ஓவர்கள் நிறைவில் இலங்கை வளர்ந்துவரும் அணி 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்ததுடன், தொடரில் 1-0 என முன்னிலையும் பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

ஜப்பான் – 97/6 (20), கடோவகி பிளெமிங் 21, கடோவகி பிளெமிங் 14, ரியோ சகுரனோ 14, டெலோன் பீரிஸ் 21/3

இலங்கை வளர்ந்துவரும் அணி – 98/6 (20), 15.3, ரன்மித் ஜயசேன 25*, துனித் ஜயதுங்க 18, இப்ரஹிம் டகஹாஷி 17/3

முடிவு – இலங்கை வளர்ந்துவரும் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<

A PHP Error was encountered

Severity: Warning

Message: Invalid argument supplied for foreach()

Filename: controllers/Embed.php

Line Number: 86

Backtrace:

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/controllers/Embed.php
Line: 86
Function: _error_handler

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/index.php
Line: 315
Function: require_once


A PHP Error was encountered

Severity: Warning

Message: Invalid argument supplied for foreach()

Filename: embed/match_result.php

Line Number: 115

Backtrace:

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/views/embed/match_result.php
Line: 115
Function: _error_handler

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/controllers/Embed.php
Line: 92
Function: view

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/index.php
Line: 315
Function: require_once