மீண்டும் பந்துவீச்சில் பிரகாசித்த மதீஷ, தீக்ஷன

IPL 2023

129
IPL 2023

இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) இன்று புதன்கிழமை (03) நடைபெற்ற லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் மற்றும் சென்னை சுபர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி வெற்றித்தோல்வியின்றி நிறைவுபெற்றது.

லக்னோவில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இடைநடுவில் மழைக்குறுக்கிட்டதன் காரணமாக, போட்டி கைவிடப்பட்டதுடன் இரண்டு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட்டன.

>>மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்த டெல்லி கெபிடல்ஸ்

நாணய சுழற்சியில் வெற்றிபெற்று களத்தடுப்பில் ஈடுபட்ட சென்னை சுபர் கிங்ஸ் அணி பந்துவீச்சில் சிறந்த ஆரம்பத்தை பெற்றிருந்தது. குறிப்பாக சுழல் பந்துவீச்சின் மூலம் சென்னை அணி லக்னோவ் அணிக்கு தடுமாற்றத்தை கொடுத்திருந்தது.

கெயல் மேயர்ஸின் விக்கெட்டினை கைப்பற்றிய மொயீன் அலி 4 ஓவர்களில் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை சாய்க்க, மஹீஷ் தீக்ஷன தன்னுடைய முதல் ஓவரில் மனன் ஓரா மற்றும் குர்னால் பாண்டியா ஆகியோரை ஆட்டமிழக்கச்செய்தார்.

இதனைத்தொடர்ந்து கடினமான அழுத்தத்திலிருந்த லக்னோவ் அணிக்கு நிக்கோலஸ் பூரன் மற்றும் ஆயுஸ் பதோனி ஆகியோர் நேர்த்தியான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். இவர்கள் 6வது விக்கெட்டுக்காக 59 ஓட்டங்களை பகிர்ந்தனர். எனினும் மதீஷ பதிரண நிக்கோலஸ் பூரணை வெளியேற்றினார்.

>>WATCH – இலங்கை வீரர்களுக்கு நம்பிக்கை கொடுக்குமா அயர்லாந்து தொடர்?

எவ்வாறாயினும் தனியாளாக சிறப்பான இன்னிங்ஸை நகர்த்திய ஆயுஸ் பதோனி 33 பந்துகளில் 59 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, கடைசி ஓவரின் 2வது பந்தை வீசிய மதீஷ பதிரண கிருஷ்ணப்பா கௌதமின் விக்கெட்டை கைப்பற்றினார். இந்த ஆட்டமிழப்பின் போது 125 ஓட்டங்களை லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணி பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது.

மீண்டும் போட்டியை நடத்துவதற்கான முயற்சிகள் இடம்பெற்றாலும், தொடர்ந்தும் மழை குறுக்கிட்டதால் போட்டி கைவிடப்பட்டதுடன் இரண்டு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட்டன. எனவே இரண்டு அணிகளும் 10 போட்டிகளில் 11 புள்ளிகளை பெற்றுக்கொண்டதுடன், ஓட்ட சராசரியின் அடிப்படையில் லக்னோவ் அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தையும், சென்னை சுபர் கிங்ஸ் அணி 3வது இடத்தையும் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<