Home Tamil நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை மோசமான தோல்வி!

நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை மோசமான தோல்வி!

Sri Lanka tour of New Zealand 2023

456

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மோசமான துடுப்பாட்ட பிரகாசிப்பு காரணமாக 198 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி படுதோல்வியை சந்தித்தது.

ஆக்லேண்ட் ஈர்டன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார்.

ஆசியக் கிண்ணத் தொடர் பாகிஸ்தானிலா? இந்திய – பாக் போட்டிகள் எங்கே?

முன்னணி வீரர்களின்றி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்காக ரச்சின் ரவீந்திரா மற்றும் சாட் போவ்ஸ் ஆகியோர் அறிமுகமாகியிருந்ததுடன், இலங்கை அணியில் தனன்ஜய டி சில்வாவுக்கு பதிலாக அஞ்செலோ மெதிவ்ஸ் இணைக்கப்பட்டிருந்தார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணியின் முதல் விக்கெட்  36 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்ட போதும் அதன் பின்னர் களமிறங்கிய துடுப்பாட்ட வீரர்கள் சராசரியான பங்களிப்பினை வழங்கத்தொடங்கினர்.

இதில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய பின் எலன் மிகச்சிறப்பாக ஆடி 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, மறுபக்கம் இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் ஓட்டங்களை கட்டுப்படுத்தி அழுத்தத்தையும் கொடுக்கத் தொடங்கினர்.

எனினும் இதற்கிடையில் ரச்சின் ரவீந்திரா 49 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து தன்னுடைய கன்னி அரைச்சதத்தை தவறவிட்ட அதேவேளை, டெரைல் மிச்சல் 47 ஓட்டங்களையும் கிளேன் பிலிப்ஸ் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இவர்களின் துடுப்பாட்ட பங்களிப்புக்கு மத்தியிலும்  சாமிக்க கருணாரத்ன அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளையும் லஹிரு குமார மற்றும் கசுன் ராஜித ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்த 49.3 ஓவர்களில் 274 ஓட்டங்களுக்கு நியூசிலாந்து அணி சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

உலகக்கிண்ணத்துக்கு நேரடி தகுதியை பெறுமா இலங்கை?

நியூசிலாந்து அணி நிர்ணயித்திருந்த இந்த 275 என்ற ஓட்ட எண்ணிக்கையானது இந்த ஆடுகளத்தை பொருத்தவரை பெறக்கூடியதாக இருந்தாலும், ஆரம்பம் முதல் இலங்கை அணி தடுமாற்றத்துக்கு முகங்கொடுத்தது.

நுவனிந்து பெர்னாண்டோ மூன்றாவது ஓவரில் ரன்-அவுட் மூலம் ஆட்டமிழக்க, அதனைத்தொடர்ந்து தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுக்க தொடங்கியது இலங்கை அணி.

இலங்கை அணியின் தடுமாற்றத்தை சரியாக கணித்துக்கொண்ட நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை கைப்பற்ற தொடங்கினர். இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் வந்தவேகத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்து களத்திலிருந்து வெளியேற, 19.5 ஓவர்களில் வெறும் 76 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 198 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இலங்கை வீரர்களில் அதிகபட்சமாக அஞ்செலோ மெதிவ்ஸ் 18 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, இவரைத்தவிர்த்து சாமிக்க கருணாரத்ன (11) மற்றும் லஹிரு குமார (10) ஆகியோர் மாத்திரமே இரட்டையிலக்க ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

நியூசிலாந்து சார்பாக ஹென்ரி சிப்லி அபாரமாக பந்துவீசி தன்னுடைய சிறந்த பந்துவீச்சு பிரதியை பதிவுசெய்தார். இவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்த, டெரைல் மிச்சல் மற்றும் பிளயர் டிக்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதேநேரம், இந்த 76 என்ற ஓட்ட எண்ணிக்கையானது நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் இலங்கை பெற்றுக்கொண்ட மிகக்குறைந்த ஓட்ட எண்ணிக்கையாக பதிவாகியது. இதற்கு முன்னர் 2007ஆம் ஆண்டு 112 ஓட்டங்களை இலங்கை அணி பதிவுசெய்திருந்தது.

அதுமாத்திரமின்றி உலகக் கிண்ணத்துக்கு நேரடி தகுதியை பெறுவதற்கான இலங்கை அணியின் வாய்ப்பு மேலும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. அடுத்த 2 போட்டிகளில் இலங்கை அணி வெற்றிபெற்றாலும், தென்னாபிரிக்க அணி தங்களுடைய அடுத்த 2 போட்டிகளில் வெற்றிபெற்றால் இலங்கை அணியால் நேரடி தகுதியை பெற்றுக்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஸ்கோர் விபரம்

Result


New Zealand
274/10 (49.3)

Sri Lanka
76/10 (19.5)

Batsmen R B 4s 6s SR
Chad Bowes c Dilshan Madushanka b Lahiru Kumara 14 15 2 0 93.33
Finn Allen c Kasun Rajitha b Chamika Karunaratne 51 49 5 2 104.08
WA Young c Charith Asalanka b Chamika Karunaratne 26 28 2 1 92.86
Daryl Mitchell c Chamika Karunaratne b Lahiru Kumara 47 58 3 2 81.03
Tom Latham c Kusal Mendis b Dasun Shanaka 5 17 0 0 29.41
Glenn Phillips c Dhananjaya de Silva b Dilshan Madushanka 39 42 3 2 92.86
Rachin Ravindra c Dasun Shanaka b Kasun Rajitha 49 52 4 1 94.23
Henry Shipley c Pathum Nissanka b Chamika Karunaratne 6 15 0 0 40.00
Matt Henry c Dasun Shanaka b Chamika Karunaratne 0 2 0 0 0.00
Ish Sodhi c Kusal Mendis b Kasun Rajitha 10 18 0 0 55.56
Blair Tickner not out 6 4 1 0 150.00


Extras 21 (b 2 , lb 4 , nb 3, w 12, pen 0)
Total 274/10 (49.3 Overs, RR: 5.54)
Bowling O M R W Econ
Kasun Rajitha 7.3 0 38 2 5.21
Dilshan Madushanka 8 0 58 1 7.25
Lahiru Kumara 10 0 46 2 4.60
Chamika Karunaratne 9 0 43 4 4.78
Wanindu Hasaranga 10 0 67 0 6.70
Dasun Shanaka 5 1 16 1 3.20


Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka b Henry Shipley 9 10 2 0 90.00
Nuwanidu Fernando run out () 4 6 0 0 66.67
Kusal Mendis c Blair Tickner b Henry Shipley 0 16 0 0 0.00
Angelo Mathews lbw b Blair Tickner 18 25 3 0 72.00
Charith Asalanka c Tom Latham b Henry Shipley 9 12 2 0 75.00
Dasun Shanaka c Daryl Mitchell b Henry Shipley 0 1 0 0 0.00
Chamika Karunaratne c Glenn Phillips b Henry Shipley 10 23 1 0 43.48
Wanindu Hasaranga c Chad Bowes b Daryl Mitchell 2 4 0 0 50.00
Kasun Rajitha c Chad Bowes b Daryl Mitchell 5 9 1 0 55.56
Lahiru Kumara c Rachin Ravindra b Blair Tickner 11 11 1 1 100.00
Dilshan Madushanka not out 4 2 1 0 200.00


Extras 4 (b 0 , lb 1 , nb 0, w 3, pen 0)
Total 76/10 (19.5 Overs, RR: 3.83)
Bowling O M R W Econ
Matt Henry 6 2 12 0 2.00
Henry Shipley 7 0 31 5 4.43
Daryl Mitchell 3 0 12 2 4.00
Blair Tickner 3.5 0 20 2 5.71



>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<