பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகும் சந்திக்க ஹதுருசிங்க

167

நியூ சவூத் வேல்ஸ் (NSW) அணியின் உதவிப் பயிற்சியாளராக செயற்பட்டு வந்த சந்திக்க ஹதுருசிங்க தனது பதவியில் இருந்து விலகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>> பாகிஸ்தான் அணிக்காக இன்னும் விளையாடலாம் – சொஹைப் மலிக்

இலங்கை அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கும் சந்திக்க ஹதுருசிங்க பங்களாதேஷ் (2014-2017), இலங்கை தேசிய கிரிக்கெட் அணிகளின் (2017-2019) முன்னாள் தலைமைப் பயிற்சியாளராக செயற்பட்டிருக்கின்றார்.

ஹதுருசிங்க அவுஸ்திரேலியாவின் உள்ளூர் பிராந்திய அணியான நியூ சவூத் வேல்ஸ் அணிக்கு பயிற்சியாளராக முன்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயற்பட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் ஹதுருசிங்கவின் ஆளுகையிலான இலங்கை கிரிக்கெட் அணி முதன்முறையாக டெஸ்ட் தொடர் ஒன்றை தென்னாபிரிக்க மண்ணில் கைப்பற்றி வரலாறு படைத்திருந்ததோடு, பங்களாதேஷ் கிரிக்கெட் அணியும் பல சாதனை வெற்றிகளை ஹதுருசிங்கவின் ஆளுகையில் பதிவு செய்திருந்தது.

ஹதுருசிங்க பதவி விலகிய நிலையில் அவரின் பொறுப்பினை நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான கெமரூன் வைட் எடுப்பார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதன்படி கெமரூன் வைட் அவுஸ்திரேலியாவின் எஞ்சிய உள்ளூர் பருவத்தில் நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு துடுப்பாட்டப் பயிற்சியாளராக செயற்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறாரா தசுன் ஷானக?

இதேநேரம் கிடைத்திருக்கும் சில தரவுகள் சந்திக்க ஹதுருசிங்க மீண்டும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் எனத் தெரிவிக்கின்றன. பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக செயற்பட்டு வந்த ரசல் டொமின்கோ அண்மையில் தனது பதவியில் இருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<