தேசிய சுபர் லீக் தொடரின் பயிற்சியாளர்கள் குழாம் அறிவிப்பு

499

இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) ஏற்பாட்டில் நடைபெறவுள்ள தேசிய சுபர் லீக் (NSL) நான்கு நாட்கள் கொண்ட போட்டி தொடரில் பங்கெடுக்கும் அணிகளின் பயிற்சியாளர்கள் குழாம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது

மோசமான சாதனையுடன் ஒருநாள் தொடரில் வைட்வொஷ் செய்யப்பட்ட இலங்கை

கழகமட்டத்தில் சாதித்த வீரர்களின் திறமைக்கு மேலும் வாய்ப்பு வழங்கும் நோக்குடன் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் போட்டித் தொடர் இவ்வார இறுதியில் ஆரம்பமாகுகின்றது.

இந்த தொடரில் ஐந்து மாவட்டங்களை (கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், தம்புள்ளை, கண்டி) பிரதிநிதித்துவம் செய்கின்ற ஐந்து அணிகள் பங்கெடுக்கும் நிலையில் தொடரில் பங்கெடுக்கும் அணிக் குழாம்கள் நேற்று (16) அறிவிக்கப்பட்டிருந்தன. இதனை அடுத்து தொடரின் பயிற்சியாளர்கள் குழாம்கள் இன்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதில் யாழ்ப்பாண அணியின் தலைமைப் பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் ஜப்னா கிங்ஸ் அணியின் பயிற்சியாளருமான திலின கண்டம்பி நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.

இதேவேளை கொழும்பு அணியின் பயிற்சியாளர் பொறுப்பு ருவீன் பீரிஸிற்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அதேநேரம் தேசிய சுபர் லீக் தொடரில் பங்கெடுக்கும் காலி அணியின் பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரரும், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயற்பட்ட அனுபவம் கொண்டிருக்கும் ருவான் கல்பகே நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.

மறுமுனையில் தம்புள்ளை அணிக்கு இலங்கை அணியின் பயிற்சியாளராக செயற்பட்ட அனுபவம் கொண்டுள்ள அவிஷ்க குணவர்தனவும், கண்டி அணிக்கு மலிந்த வர்ணபுரவும் தலைமைப் பயிற்சியாளர்களாக பொறுப்பேற்றிருக்கின்றனர். அத்துடன் தம்புள்ளை அணிக்கு உபுல் சந்தன உதவி தலைமைப் பயிற்சியாளராக தனது சேவைகளை வழங்கவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பயிற்சியாளர்கள் குழாம்

கொழும்பு காலி யாழ்ப்பாணம் தம்புள்ளை கண்டி
முகாமையாளர் பிரியன்த உதயரத்ன திலான் அபேய்ரத்ன செஹ்சாத் நிஷார் சுரன்ஜித் தர்மசேன சம்சீர் ஜலீல்
தலைமைப் பயிற்சியாளர் ருவீன் பீரிஸ் ருவான் கல்பகே திலின கண்டம்பி அவிஷ்க பெர்னாண்டோ மலின்த வர்ணபுர
உதவி தலைமைப் பயிற்சியாளர் தம்மிக்க சுதர்சன உபுல் சந்தன மனோஜ் அபேவிக்ரம
உதவிப் பயிற்சியாளர் சமன் ஜயன்த சனுக திஸ்ஸநாயக்க ரவிந்திர புஷ்பகுமார சஜீவ வீரக்கோன் இயன் டேனியல்
உதவிப் பயிற்சியாளர் நிசன்த வீரசிங்க இன்டிக்க டி சரம் தாமர அபேய்ரத்ன தரங்க தம்மிக்க சரத் ஜயவர்தன
உதவிப் பயிற்சியாளர் பசான் வனசிங்க

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<