LPL போட்டி மத்தியஸ்தர்கள் குழாத்தில் பிரதீப் ஜயப்பிரகாஷ்!

Lanka Premier League 2022

834

இலங்கையில் இம்மாதம் 6ம் திகதி ஆரம்பமாகவுள்ள லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) பணியாற்றவுள்ள போட்டி மத்தியஸ்தர்கள் மற்றும் நடுவர்கள் தொடர்பிலான விபரத்தை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

அதன்படி இம்முறை LPL தொடரில் வெளிநாட்டு நடுவர்கள் முதன்முறையாக உள்வாங்கப்பட்டுள்ளதுடன், உள்ளூர் போட்டிகளில் பணியாற்றிவரும் அதிகாரிகளுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

>> IPL ஏலத்தில் அஞ்செலோ மெதிவ்ஸிற்கு 2 கோடி!

அதன்படி இலங்கையின் உள்ளூர் போட்டிகள் மற்றும் இலங்கை A அணிகளுக்கு இடையிலான தொடர்கள் மற்றும் வளர்ந்துவரும் அணிகளுக்கான போட்டிகளில் மத்தியஸ்தராக செயற்பட்டுவந்த முன்னாள் இலங்கை வீரர் பிரதீப் ஜயபிரகாஷ் முதன்முறையாக LPL தொடரில் போட்டி மத்தியஸ்தராக செயற்படவுள்ளார்.

அதேநேரம் ஐசிசியின் நடுவர் குழாத்தில் உள்ள நியூசிலாந்தின் வெயன் நைட்ஸ் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் கிரொகரி பிராத்வைட் ஆகியோர் முதன்முறையாக வெளிநாட்டு நடுவர்களாக தொடரில் இணைந்துள்ளனர்.

இவர்களுடன் ஐசிசியின் போட்டி மத்தியஸ்தர்கள் குழாத்தில் உள்ள கிரேம் லெப்ரோய், வெண்டல் லெப்ரோய் ஆகியோருடன், மனோஜ் மெண்டிஸ் மற்றும் பிரதீப் ஜயப்பிரகாஷ் ஆகியோர் இணைந்துள்ளனர்.

>> “தசுன் ஷானகதான் எனக்கு வாய்ப்பை பெற்றுத்தந்தார்” – சரித் அசலங்க!

போட்டி நடுவர்களாக ஐசிசி நடுவர் குழாத்தில் உள்ள குமார் தர்மசேன, ரவீந்திர விமலசிறி, ருச்சிர பல்லியகுருகே, வெயன் நைட்ஸ், கிரொகரி பிராத்வைட், லிண்டன் எனிபல், பிரகீத் ரம்புக்வெல்ல ஆகியோருடன் முன்னாள் ஐசிசி நடுவர் ரென்மோர் மார்டினஸ் மற்றும் உள்ளூர் போட்டிகளுக்கான நடுவர்களான ரவீந்திர கொட்டாச்சி, சாமர டி சொய்ஷா, சந்ரிக அமரசிங்க ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

LPL தொடர் எதிர்வரும் 6ம் திகதி ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளதுடன், 23ம் திகதிவரை நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<