ஒருநாள் தொடருக்காக புதிய குழாத்தை அறிவித்த இந்தியா!

South Africa tour of India 2022

1423

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

T20 உலகக்கிண்ணத்துக்கான இந்திய குழாம் வியாழக்கிழமை (06) அவுஸ்திரேலியா நோக்கி புறப்படவுள்ளதுடன், சிகர் தவான் தலைமையிலான மற்றுமொரு குழாத்தை இந்திய கிரிக்கெட் சபை பெயரிட்டுள்ளது.

அஷானின் சகலதுறை ஆட்டத்தால் கொழும்பு அணிக்கு மூன்றாவது வெற்றி

இந்த குழாத்தை பொருத்தவரை சிகர் தவான் அணித்தலைவராக பெயரிடப்பட்டுள்ளதுடன், T20 உலகக்கிண்ண குழாத்தின் மேலதிக வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஷிரேயாஸ் ஐயர் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரம், T20 உலகக்கிண்ண குழாத்தின் மேலதிக வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ரவி பிஸ்னோய் மற்றும் தீபக் சஹார் ஆகியோரும் இந்த குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட இந்த வீரர்களுடன் நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான போட்டித்தொடரில் சிறந்த பிரகாசிப்பை வெளிப்படுத்திய துடுப்பாட்ட வீரர் ரஜட் பட்டிதார் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமார் ஆகியோர் முதன்முறையாக தேசிய அணியில் பெயரிடப்பட்டுள்ளனர்.

தேசிய அணியில் இடைக்கிடையில் வாய்ப்புகளை பெற்றுவரும் சுப்மான் கில், சஞ்சு சம்சன் மற்றும் இசான் கிசான் ஆகியோருடன், அவேஷ் கான், சர்துல் தாகூர், சபாஷ் அஹ்மட் மற்றும் மொஹமட் சிராஜ் ஆகியோரும் ஒருநாள் தொடருக்கான குழாத்தில் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

தென்னாபிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி, லக்னோவில் வியாழக்கிழமை (06) ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய குழாம்

சிகர் தவான் (தலைவர்), ருதுராஜ் கைகவட், சுப்மான் கில், ஷிரேயாஸ் ஐயர், ரஜட் பட்டிதார், ராஹுல் திரிபாதி, இசான் கிஷான், சஞ்சு சம்சன், சபாஷ் அஹ்மட், சர்துல் தாகூர், குல்தீப் யாதவ், ரவி பிஸ்னோய், முகேஷ் குமார், அவேஷ் கான், மொஹமட் சிராஜ், தீபக் சஹார்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<