அஹான் இரட்டைச் சதமடிக்க; 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார் வனுஜ

321

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் மூன்று நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரின் ஏழாவது வாரத்துக்கான 12 போட்டிகளின் இரண்டாவது நாள் ஆட்டங்கள் நேற்று (01) நிறைவுக்கு வந்தன.

இதில் NCC கழகத்தைச் சேர்ந்த 21 வயது வலதுகை துடுப்பாட்ட வீரரான அஹான் விக்ரமசிங்க, சரசென்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கு எதிராக இரட்டைச் சதமடித்து ஆட்டமிழக்காமல் 234 ஓட்டங்களைக் குவித்தார்.

முதல்தரப் போட்டிகளில் தனது கன்னி சதத்தை நேற்றைய தினம் பதிவு செய்த அவர், இம்முறை மேஜர் பிரீமியர் லீக்கில் இரட்டைச் சதமடித்த 5ஆவது வீரராகவும் இடம்பிடித்தார்.

இதனிடையே, NCC கழகத்தின் அம்ஷி டி சில்வா (104), குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகத்தின் சமீர சந்தமால் (118), கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தின் சங்கீத் குரே (145) ஆகிய வீரர்கள் சதமங்களைப் பதிவு செய்தனர்.

மேஜர் லீக்கில் நுவனிது 5ஆவது சதமடிக்க; அஷான் விக்கெட் மழை

பந்துவீச்சைப் பொறுத்தமட்டில் Ace Capital கிரிக்கெட் கழகத்தைச் சேர்ந்த 19 வயது சுழல் பந்துவீச்சாளரான வனுஜ சஹன், இராணுவ கழகத்துக்கு எதிரான போட்டியில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் முதல் இன்னிங்ஸில் 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், 2ஆவது இன்னிங்ஸில் 59 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

அதேபோன்று, பாணந்துறை விளையாட்டுக் கழகத்தின் நிமேஷ் விமுக்தி (7/43), கடற்படை விளையாட்டுக் கழகத்தின் நவின் கவிகார (7/84), ராகம கிரிக்கெட் கழகத்தின் சஷிக துல்ஷான் (6/135), மற்றும் SSC கழகத்தின் பிரபாத் ஜயசூரிய (6/39) ஆகிய வீரர்கள் 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்தனர்.

போட்டியின் சுருக்கம்

NCC கழகம் எதிர் சரசென்ஸ் விளையாட்டுக் கழகம்

NCC கழகம் – 475 (119.3) – அஹான் விக்ரமசிங்க 234*, அம்ஷி டி சில்வா 104, சஹன் ஆரச்சிகே 61, லஹிரு உதார 28, துஷான் விமுக்தி 4/176, மொஹமட் டில்ஷாத் 4/92

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் – 161/6 (45) – நவிந்து விதானகே 44, ப்ரமோத் மதுவன்த 33*, நிபுன் ரன்சிக 2/25, சஹன் ஆரச்சிகே 2/33


SSC கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம்

SSC கழகம் – 387 (104.2) – நுவனிது பெர்னாண்டோ 148, லக்ஷித மானசிங்க 55, பிரபாத் ஜயசூரிய 41, சம்மு அஷான் 38, ரொஷேன் சில்வா 34, சஷிக துல்ஷான் 6/135, நிபுன் மாலிங்க 3/63

ராகம கிரிக்கெட் கழகம் – 104/8 (28) – நிபுன் மாலிங்க 26, பிரபாத் ஜயசூரிய 6/39


செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்

செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 297 (92.1) – சச்சித ஜயதிலக 52, லொஹான் டி சொய்ஸா 44, சுச்சிர பரணதால 43, ரகு சர்மா 6/88, சந்துன் மதுஷங்க 3/70

காலி கிரிக்கெட் கழகம் – 167/3 (53) – வினுர துல்சர 56, சமீன் கன்தனேஆரச்சி 50, யசோதா லங்கா 25, தரிந்து ரத்நாயக 2/85


Ace Capital கிரிக்கெட் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்

Ace Capital கிரிக்கெட் கழகம் – 312 (69.2) – லசித் க்ரூஸ்புள்ளே 62, நினாத் காதம் 56, பர்மோத் ஹெட்டிவத்த 49, ஓஷத பெர்னாண்டோ 48, கயான் சிறிசோம 5/56, லசந்த ருக்மால் 2/61

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 80 (31.3) – மொஹமட் இர்பான் 5/43

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 210 (54.1) F/O – மிஷேன் சில்வா 45, மொவின் சுபசிங்க 44, கசுன் ஏகநாயக 39, வனுஜ சஹன் 7/59

முடிவு – Ace Capital கிரிக்கெட் கழகம் இன்னிங்ஸ் மற்றும் 22 ஓட்டங்களால் வெற்றி


இராணுவ விளையாட்டுக் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்

இராணுவ விளையாட்டுக் கழகம் – 215 (80.2) – லக்ஷான் எதிரிசிங்க 51, கிஹான் கோரளகே 50*, சுமிந்த லக்ஷான் 42, ஷெஹான் பெர்னாண்டோ 24, சனுர பெர்னாண்டோ 3/68, பசிந்து மதுஷான் 2/30

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 25/1 (9)


BRC கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

BRC கழகம் – 153 (44.2) – லஹிரு சமரகோன் 37, தனால் ஹேமானந்த 25, அஷான் ப்ரியன்ஜன் 8/51, லக்ஷான் சந்தகன் 1/32

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 210 (60.1) – லசித் அபேரட்ன 56, பவன் ரத்நாயக 35, அஷான் ப்ரியன்ஜன் 34, துஷான் ஹேமன்த 4/76, துவிந்து திலகரட்ன 3/49

BRC கழகம் – 229/7 (60.3) – டிலான் ஜயலத் 93, லஹிரு சமரகோன் 46*, தனால் ஹேமன்த 38, லக்ஷான் சந்தகன் 4/77, அஷான் ப்ரியன்ஜன் 2/88


குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் எதிர் கண்டி சுங்க விளையாட்டுக் கழகம்

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 407 (123.1) – சமீர சந்தமால் 118, தமித் பெரேரா 92, கயான் மனீஷான் 48, சச்சித்ர பெரேரா 4/90, சம்பத் பெரேரா 2/60

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 103/1 (28) – இமேஷ் உதயங்க 61*, இரோஷ் சமரசூரிய 40*


பாணந்துறை விளையாட்டுக் கழகம் எதிர் நுகேகொட விளையாட்டுக் கழகம்

பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 392 (85.1) – ரமிந்த விஜேசூரிய 125, கோஷான் தனுஷ்க 78, நிமேஷ் விமுக்தி 65, தரிந்து கௌஷால் 31, சஹன் நாணயக்கார 4/84, கைசர் அஷ்ரப் 3/98

நுகேகொட விளையாட்டுக் கழகம் – 75 (29.5) – முர்தசா ட்ரன்க்வாலா 23, நிமேஷ் விமுக்தி 7/43, கோஷான் தனுஷ்க 2/13

நுகேகொட விளையாட்டுக் கழகம் – 116/1 (16.4) F/O – அபிஷேக் லியனாஆரச்சி 60*, முர்தசா ட்ரன்க்வாலா 37*


களுத்துறை நகர கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

களுத்துறை நகர கழகம் – 235/8 (82) – சுகித மனோஜ் 60, யெசித் ரூபசிங்க 42, நிபுன கமகே 23, நுவன் பிரதீப் 3/61, நளின் ப்ரியதர்ஷன 2/86


முவர்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

முவர்ஸ் விளையாட்டுக் கழகம் – 126 (38.5) – பசிந்து சூரியபண்டார 46, அதீஷ திலன்சன 19, துனித் வெல்லாலகே 4/32, ஜெஹான் டேனியல் 3/33,

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 468/9d (104.2) – சங்கீத் குரே 145, ப்ரியமால் பெரேரா 81, துனித் வெல்லாலகே 78*, விஷாத் ரன்திக 54, ரமேஷ் மெண்டிஸ் 3/137, திலங்க உதேஷன 2/72, மிலான் ரத்நாயக 2/106

முவர்ஸ் விளையாட்டுக் கழகம் – 26/1 (10.4)


சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 191 (58.1) – விஷ்வ சதுரங்க 58, தசுன் செனவிரட்ன 28, கசுன் விதுர 24, திலும் சுதீர 6/71, ரவிந்து பெர்னாண்டோ 3/76

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 155 (36.3) – கமேஷ் நிர்மால் 61*, நவோத் பரணவிதான 24, ரவிந்து பெர்னாண்டோ 20, லசித் லக்ஷான் 6/57, ஸ்வப்னில் கூகலே 3/55

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 287/7 (78.3) – கௌரவ் ஜாதர் 81, புலின தரங்க 62, லசித் லக்ஷான் 49, விஷ்வ சதுரங்க 25, ரவீன் டி சில்வா 2/33, திலும் சுதீர 2/101


ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் எதிர் கடற்படை விளையாட்டுக் கழகம்

ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 342 (98.1) – ஹஸ்னைன் பொக்ஹாரி 117, லஹிரு மதுஷங்க 71, யொஹான் டி சில்வா 61, நவின் கவிகார 7/84, அசன்த சிங்கப்புலி 2/75

கடற்படை விளையாட்டுக் கழகம் – 56/2 (19.5) – அதீஷ நாணயக்கார 32

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<