T20 உலகக் கிண்ணத்தின் பின் இலங்கையுடன் விளையாடும் இந்தியா

529

T20 உலகக் கிண்ணத்தொடரினை அடுத்து இந்திய கிரிக்கெட் அணி இலங்கையுடன் ஒருநாள் மற்றும் T20I தொடர்களில் விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>> புவனேஷ்வர் குமாரை பின்தள்ளிய மஹீஷ் தீக்ஷன!

இந்திய மண்ணில் நடைபெறும் இந்த கிரிக்கெட் தொடர்கள் 2023ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் இடம்பெறவிருப்பதோடு, இந்த தொடர்களில் மூன்று ஒருநாள் போட்டிகளும், மூன்று T20I போட்டிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதேநேரம் இந்திய அணி இலங்கையுடனான தொடருக்கு முன்னர் நியூசிலாந்தினையும் தமது சொந்த மண்ணில் வைத்து எதிர்கொள்ளவிருக்கின்றது. இந்த தொடரிலும் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20I போட்டிகள் அடங்குகின்றன.

>> புவனேஷ்வர் குமாரை பின்தள்ளிய மஹீஷ் தீக்ஷன!

அதேநேரம் இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் ஆப்கானிஸ்தான் அணியுடன் ஒருநாள் தொடர் ஒன்றில் ஆடவிருக்கின்றது. இலங்கையின் சொந்த மண்ணில் நடைபெறவுள்ள இந்த ஒருநாள் தொடர் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐ.சி.சி.இன்) ஒருநாள் சுபர் லீக்கினுள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக இலங்கை – இந்திய அணிகள் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் டெஸ்ட் மற்றும் T20I தொடர்களில் ஆடியிருந்த நிலையில், இந்த இரு தொடர்களினையும் இந்தியா இலகுவான முறையில் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<