இரண்டாவது டெஸ்டிலிருந்து நீக்கப்படும் அஸ்டன் ஏகார்!

Australia tour of Sri Lanka 2022

166

இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து அவுஸ்திரேலிய அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர் அஸ்டன் ஏகார் நீக்கப்பட்டுள்ளார்.

அஸ்டன் ஏகார் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியின்போது உபாதைக்கு முகங்கொடுத்திருந்தார். இவருடைய இடுப்பு பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக ஒருநாள் தொடர் முழுவதும் விளையாடவில்லை.

ஆஸி.யின் சுழல் பந்துவீச்சில் சரிந்த இலங்கைக்கு படுதோல்வி!

தொடர்ந்து இவருடைய உபாதை குணமடையாத நிலையில், முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கப்பட்டதுடன், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஏகார் விளையாடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என தெரிவிக்கப்பட்டது.

எனினும் அஷ்டன் ஏகாரின் உபாதை முழுமையாக குணமடையாத காரணத்தால் அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் விளையாடமாட்டார் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவித்துள்ளது.

அஸ்டன் ஏகார் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், 17 பேர்கொண்ட இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான குழாத்தில் ஜோன் ஹோலண்ட் இணைக்கப்பட்டுள்ளார். ஜோன் ஹோலண்ட் இறுதியாக 2017ம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடியிருந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இவர் விளையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்த மிச்சல் ஸ்வெப்சனுக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிப்பதுடன், இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 8ம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<