Home Tamil ரமேஷ் மெண்டிஸின் சுழலுடன் ஆஸி.க்கு நெருக்கடி கொடுக்கும் இலங்கை!

ரமேஷ் மெண்டிஸின் சுழலுடன் ஆஸி.க்கு நெருக்கடி கொடுக்கும் இலங்கை!

Australia tour of Sri Lanka 2022

200

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இன்று (29) ஆரம்பித்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 212 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

அதேநேரம் தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆரம்பித்திருந்த அவுஸ்திரேலிய அணியானது, இன்றைய ஆட்டநேர நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 98 ஓட்டங்களை பெற்றுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆயத்தங்கள் தொடர்பில் கூறும் திமுத் கருணாரத்ன!

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்த இந்த டெஸ்ட் போட்டியானது அவுஸ்திரேலியாவின் முன்னாள் சுழல் ஜாம்பவான் ஷேர்ன் வோர்னின் மறைவை நினைவுகூறும் வகையில், ஆரம்பிக்கப்பட்டது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இலங்கை அணி

திமுத் கருணாரத்ன (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், தனன்ஜய டி சில்வா, தினேஷ் சந்திமால், நிரோஷன் டிக்வெல்ல, ரமேஷ் மெண்டிஸ், ஜெப்ரி வெண்டர்சே, லசித் எம்புல்தெனிய, அசித பெர்னாண்டோ

அவுஸ்திரேலிய அணி

உஸ்மான் கவாஜா, டேவிட் வோர்னர், மார்னஸ் லபுசேங், ஸ்டீவ் ஸ்மித், கிளேன் மெக்ஸ்வேல், கெமரோன் கிரீன், அலெக்ஸ் கேரி, பெட் கம்மின்ஸ் (தலைவர்), மிச்சல் ஸ்டார்க், நெதன் லையோன், மிச்சல் ஸ்வெப்ஸன்

ஆரம்பத்தை பொருத்தவரை பெதும் நிஸ்ஸங்க மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் நிதானமான ஓட்டங்களை குவித்தனர். முதல் விக்கெட்டுக்காக 38 ஓட்டங்களை பெற்றிருந்த போதும் பெதும் நிஸ்ஸங்க 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய குசல் மெண்டிஸ் 3 ஓட்டங்களுடன் வெளியேற, 42 ஓட்டங்களுக்கு இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்தது.

தொடர்ந்து மெதிவ்ஸ் மற்றும் திமுத் கருணாரத்ன சிறந்த ஒரு இன்னிங்ஸை கட்டியெழுப்ப, மதியபோசன இடைவேளையின்போது இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 68 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

எனினும் மதியபோசன இடைவேளையின் பின்னர் அவுஸ்திரேலிய அணியின் சுழல் பந்துவீச்சாளர்களான நெதன் லையோன் மற்றும் மிச்சல் ஸ்வெப்ஸன் ஆகியோர் இலங்கை அணிக்கு அழுத்தத்தை கொடுத்து விக்கெட்டுகளை கைப்பற்ற ஆரம்பித்தனர்.

முக்கியமாக திமுத் கருணாரத்ன 28 ஓட்டங்களை பெற்றிருந்தபோது நெதன் லையோனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து தனன்ஜய டி சில்வா மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் மிச்சல் ஸ்வெப்சனின் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தனர்.

விக்கெட்டுகளை பறிகொடுத்த இலங்கை அணிக்கு நிரோஷன் டிக்வெல்ல வேகமாக ஓட்டங்களை குவிக்க முற்பட, மறுமுனையில் அஞ்செலோ மெதிவ்ஸ் நிதானமாக துடுப்பெடுத்தாடினார். துரதிஷ்டவசமாக மெதிவ்ஸ் 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க ரமேஷ் மெண்டிஸ் களமிறங்கினார்.

இதன்போது 7வது விக்கெட்டுக்காக நிரோஷன் டிக்வெல்ல மற்றும் ரமேஷ் மெண்டிஸ் முக்கியமான இணைப்பாட்டமொன்றை பகிர, நிரோஷன் டிக்வெல்ல தேநீர் இடைவேளையின் போது அரைச்சதத்தை கடந்தார்.

எனினும் தேநீர் இடைவேளையின் பின்னர் தொடர்ச்சியாக மிகுதியிருந்த விக்கெட்டுகளை இலங்கை அணி பறிகொடுக்க 212 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. நிரோஷன் டிக்வெல்ல அதிகபட்சமாக 58 ஓட்டங்களை பெற, ரமேஷ் மெண்டிஸ் 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் நெதன் லையோன் 5 விக்கெட்டுகளையும், மிச்சல் ஸ்வெப்சன் 3 விக்கெட்டுகளையும் அதிகபட்சமாக வீழ்த்தினர்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி வேகமாக ஓட்டங்களை குவிக்கத்தொடங்கியது. டேவிட் வோர்னர் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் சிறப்பாக ஓட்டங்களை குவித்துவந்த நிலையில், டேவிட் வோர்னர் 25 ஓட்டங்களுடன் ரமேஷ் மெண்டிஸின் பந்துவீச்சில் அட்டமிழந்தார்.

தொடர்ந்து மார்னஸ் லபுசேங் 13 ஓட்டங்களுடன் ரமேஷ் மெண்டிஸின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, ஸ்டீவ் ஸ்மித் துரதிஷ்டவசமாக ரன்-அவுட் முறையில் ஆட்டமிழந்தார். எனினும் உஸ்மான் கவாஜா இன்றைய ஆட்டநேர இறுதிவரை விக்கெட்டினை விட்டுக்கொடுக்காமல் துடுப்பெடுத்தாடி 47 ஓட்டங்களை பெற, அவுஸ்திரேலிய அணியானது 98 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இதேவேளை அவுஸ்திரேலிய அணியானது இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை எட்டுவதற்கு இன்னும் 114 ஓட்டங்களை பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Result


Sri Lanka
212/10 (59) & 113/10 (22.5)

Australia
321/10 (70.5) & 10/0 (0.4)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Alex Carey b Pat Cummins 23 44 3 0 52.27
Dimuth Karunaratne c David Warner b Nathan Lyon 28 84 3 0 33.33
Kusal Mendis c Alex Carey b Mitchell Starc 3 15 0 0 20.00
Angelo Mathews c David Warner b Nathan Lyon 39 71 3 0 54.93
Dhananjaya de Silva c Alex Carey b Mitchell Swepson 14 22 2 0 63.64
Dinesh Chandimal c David Warner b Mitchell Swepson 0 1 0 0 0.00
Niroshan Dickwella c Alex Carey b Nathan Lyon 58 59 6 0 98.31
Ramesh Mendis lbw b Nathan Lyon 22 36 3 0 61.11
Jeffery Vandersay c Mitchell Starc b Mitchell Swepson 6 15 1 0 40.00
Lasith Embuldeniya c Usman Khawaja b Nathan Lyon 6 6 0 1 100.00
Asitha Fernando  not out 2 1 0 0 200.00


Extras 11 (b 5 , lb 6 , nb 0, w 0, pen 0)
Total 212/10 (59 Overs, RR: 3.59)
Bowling O M R W Econ
Mitchell Starc 9 0 31 1 3.44
Pat Cummins 12 4 25 1 2.08
Nathan Lyon 25 2 90 5 3.60
Mitchell Swepson 13 0 55 3 4.23
Batsmen R B 4s 6s SR
Usman Khawaja c Pathum Nissanka b Jeffery Vandersay 71 130 7 0 54.62
David Warner lbw b Ramesh Mendis 25 24 5 0 104.17
Marnus Labuschagne c Nuwanidu Fernando b Ramesh Mendis 13 19 2 0 68.42
Steve Smith run out () 6 11 0 0 54.55
Travis Head c & b Dhananjaya de Silva 6 16 0 0 37.50
Cameron Green lbw b Ramesh Mendis 77 109 6 0 70.64
Alex Carey c Dinesh Chandimal b Ramesh Mendis 45 47 6 0 95.74
Mitchell Starc c & b Jeffery Vandersay 10 30 1 0 33.33
Pat Cummins b Avishka Fernando 26 17 1 3 152.94
Nathan Lyon not out 15 20 1 0 75.00
Mitchell Swepson b Avishka Fernando 1 2 0 0 50.00


Extras 26 (b 20 , lb 3 , nb 1, w 2, pen 0)
Total 321/10 (70.5 Overs, RR: 4.53)
Bowling O M R W Econ
Asitha Fernando  8.5 1 34 2 4.00
Dhananjaya de Silva 5 0 8 1 1.60
Lasith Embuldeniya 15 0 73 0 4.87
Ramesh Mendis 32 0 112 4 3.50
Jeffery Vandersay 10 0 68 2 6.80
Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka lbw b Mitchell Swepson 14 19 1 0 73.68
Dimuth Karunaratne c Alex Carey b Nathan Lyon 23 20 5 0 115.00
Kusal Mendis c Mitchell Swepson b Nathan Lyon 8 15 1 0 53.33
Oshada Fernando c Steve Smith b Mitchell Swepson 12 18 1 1 66.67
Dhananjaya de Silva lbw b Travis Head 11 20 0 0 55.00
Dinesh Chandimal b Travis Head 13 21 1 0 61.90
Niroshan Dickwella c Marnus Labuschagne b Nathan Lyon 3 7 0 0 42.86
Ramesh Mendis c Usman Khawaja b Nathan Lyon 0 2 0 0 0.00
Jeffery Vandersay b Travis Head 8 8 1 0 100.00
Lasith Embuldeniya lbw b Travis Head 0 6 0 0 0.00
Asitha Fernando  not out 5 2 1 0 250.00


Extras 16 (b 10 , lb 5 , nb 1, w 0, pen 0)
Total 113/10 (22.5 Overs, RR: 4.95)
Bowling O M R W Econ
Mitchell Starc 2 0 23 0 11.50
Nathan Lyon 11 1 31 4 2.82
Mitchell Swepson 7 0 34 2 4.86
Travis Head 2.5 0 10 4 4.00


Batsmen R B 4s 6s SR
David Warner not out 10 4 1 1 250.00
Usman Khawaja not out 0 0 0 0 0.00


Extras 0 (b 0 , lb 0 , nb 0, w 0, pen 0)
Total 10/0 (0.4 Overs, RR: 15)
Bowling O M R W Econ
Ramesh Mendis 0.4 0 10 0 25.00



>> மேலும் கிரிக்கெட் செய்திகளுக்கு <<