Home Tamil இறுதிவரை போராடி தோல்வியடைந்த இலங்கை மகளிர் அணி!

இறுதிவரை போராடி தோல்வியடைந்த இலங்கை மகளிர் அணி!

India Women's tour of Sri Lanka 2022

160
India Womens

இலங்கை மகளிர் மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையில் தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது T20I போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

முதல் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்திருந்த நிலையில், இரண்டாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றிருந்த இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

>> அவுஸ்திரேலிய தொடருக்கான இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு

முதல் போட்டியில் ஓட்டங்களை குவிக்க தடுமாறியிருந்த இலங்கை அணிக்கு, இந்தப்போட்டியில் அணித்தலைவி சமரி அதபத்து மற்றும் இளம் வீராங்கனை விஷ்மி குணரத்ன ஆகியோர் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர்.

குறிப்பாக இலங்கை மகளிர் அணிக்காக சிறந்த T20I ஆரம்ப இணைப்பாட்டத்தை பதிவுசெய்த இவர்கள் இருவரும், 87 ஓட்டங்களை பகிர்ந்தனர். ஒருகட்டத்தில் இலங்கை அணி 130 ஓட்டங்களை கடப்பதற்கான வாய்ப்புகள் இருந்த போதும், இவர்கள் இருவரின் ஆட்டமிழப்பை தொடர்ந்து இலங்கை அணியின் விக்கெட்டுகள் தொடர்ச்சியாக சரிக்கப்பட்டன.

விஷ்மி குணரத்ன T20I கிரிக்கெட்டில் தன்னுடைய அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையை பதிவுசெய்து 45 ஓட்டங்களை பெற்றதுடன், சமரி அதபத்து 43 ஓட்டங்களை பெற்றார். இவர்களையடுத்து களமிறங்கிய வீராங்கனைகளில் எந்தவொரு வீராங்கனையும் இரட்டையிலக்க ஓட்டங்களை அடையவில்லை. எனவே, இலங்கை அணியானது 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளையும் இழந்து 125 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இந்திய அணியின் பந்துவீச்சில் தீப்தி ஷர்மா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய மகளிர் அணி முதல் ஆறு ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்தபோதும் வேகமாக ஓட்டங்களை குவித்து 52 ஓட்டங்களை கடந்தது. இந்த ஓட்ட எண்ணிக்கையானது இந்திய அணி வெற்றியிலக்கை அடைவதற்கு ஆரம்ப புள்ளியாக மாறியிருந்தது.

மத்திய ஓவர்கள் மற்றும் இறுதி ஓவர்களில் இலங்கை அணி மிகச்சிறப்பாக பந்துவீசியிருந்த போதும், ஸ்மிர்தி மந்தனா மற்றும் அணித்தலைவி ஹர்மன்பிரீட் கவுர் ஆகியோரின் மிகச்சிறப்பான இன்னிங்ஸ்களின் உதவியுடன் இந்திய அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

இந்திய அணியின் சார்பில் ஸ்மிர்தி மந்தனா அதிகபட்சமாக 39 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, ஹர்மன்பிரீட் கவுர் ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் ஓசதி ரணசிங்க மற்றும் இனோகா ரணவீர ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதேவேளை இந்திய அணியானது மூன்று போட்டிகள் கொண்ட T20I  தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளதுடன், மூன்றாவது T20I போட்டி எதிர்வரும் 27ம் திகதி தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Result


Sri Lanka Women
125/7 (20)

India Women
127/5 (19.1)

Batsmen R B 4s 6s SR
Vishmi Gunaratne c & b Harmanpreet Kaur 45 50 6 0 90.00
Chamari Athapaththu c Radha Yadav b Pooja Vastrakar 43 41 7 1 104.88
Harshitha Samarawickrama c Shafali Verma b Deepti Sharma 9 13 0 0 69.23
Kavisha Dilhari c Smriti Mandhana b Renuka Singh 2 5 0 0 40.00
Nilakshi de Silva lbw b Deepti Sharma 1 2 0 0 50.00
Hasini Perera run out () 0 0 0 0 0.00
Oshadi Ranasinghe c Yastika Bhatia b Radha Yadav 5 3 1 0 166.67
Anushka Sanjeewani not out 8 5 0 0 160.00
Sugandika Kumari not out 1 1 0 0 100.00


Extras 11 (b 4 , lb 2 , nb 0, w 5, pen 0)
Total 125/7 (20 Overs, RR: 6.25)
Bowling O M R W Econ
Renuka Singh 4 0 26 1 6.50
Deepti Sharma 4 0 34 2 8.50
Simran Bahadur 2 0 14 0 7.00
Radha Yadav 3 0 15 1 5.00
Pooja Vastrakar 4 0 18 1 4.50
Harmanpreet Kaur 3 0 12 1 4.00


Batsmen R B 4s 6s SR
Smriti Mandhana st Anushka Sanjeewani b Inoka Ranaweera 39 34 8 0 114.71
Shafali Verma c Kavisha Dilhari b Oshadi Ranasinghe 17 10 2 1 170.00
sabbhineni meghana st Anushka Sanjeewani b Inoka Ranaweera 17 10 4 0 170.00
Harmanpreet Kaur not out 31 32 2 0 96.88
Jemimah Rodrigues c Hasini Perera b Inoka Ranaweera 3 6 0 0 50.00
Yastika Bhatia st Anushka Sanjeewani b Oshadi Ranasinghe 13 18 0 0 72.22
Deepti Sharma not out 5 5 0 0 100.00


Extras 2 (b 0 , lb 1 , nb 0, w 1, pen 0)
Total 127/5 (19.1 Overs, RR: 6.63)
Bowling O M R W Econ
Udeshika Prabodhani 2 0 22 0 11.00
Oshadi Ranasinghe 4 0 32 2 8.00
Sugandika Kumari 4 0 20 1 5.00
Inoka Ranaweera 4 0 18 2 4.50
Kavisha Dilhari 3.1 0 17 0 5.48
Chamari Athapaththu 2 0 17 0 8.50



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<