Home Tamil முதல் T20I போட்டியில் இந்திய மகளிர் அணிக்கு இலகு வெற்றி!

முதல் T20I போட்டியில் இந்திய மகளிர் அணிக்கு இலகு வெற்றி!

India Women's tour of Sri Lanka 2022

172

இலங்கை மகளிர் மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையில் தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் T20I போட்டியில் இந்திய அணி 34 ஓட்டங்களால் அணி வெற்றியை பதிவுசெய்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு, இலங்கை மகளிர் அணி ஆரம்பத்திலிருந்து அழுத்தம் கொடுத்தது.

அவுஸ்திரேலிய அணியில் மேலும் ஒரு வீரருக்கு உபாதை

இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை ஸ்மிர்த்தி மந்தனா மற்றும் சப்பினேனி மேகனா ஆகியோர் ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து ஷப்பாலி வர்மா மற்றும் ஹர்மன்பிரீட் சிங் ஆகியோர் மத்திய ஓவர்களில் ஓட்டங்களை குவித்து இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தனர். ஓட்டங்கள் அதிகரித்தபோதும், ஓட்டவேகம் குறைவாகவே நகர்த்தப்பட்டது.

ஷப்பாலி வர்மா 31 ஓட்டங்களையும், ஹர்மன்பிரீட் சிங் 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தனர். ஒருகட்டத்தில் இந்திய அணி 130 ஓட்டங்களை கடப்பதற்கான வாய்ப்புகள் இல்லாத போதும், கவீஷா டில்ஹாரியின் இறுதி ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் 3 பௌண்டரிகளை தீப்தி ஷர்மா மற்றும் ஜெமிமா ரொட்ரிகஸ் ஆகியோர் விளாசி அணியின் ஓட்ட எண்ணிக்கையை 138/6 ஆக உயர்த்தினர்.

ஜெமிமா ரொட்ரிகஸ் அதிகபட்சமாக 36 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற, தீப்தி ஷர்மா 8 பந்துகளில் 17 ஓட்டங்களை விளாசினார். இலங்கை அணியின் பந்துவீச்சில் இனோகா ரணவீர 3 விக்கெட்டுகளையும், ஓசதி ரணசிங்க 2 விக்கெட்டுகளையும் அதிகபட்சமாக வீழ்த்தினர்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை மகளிர் அணி ஆரம்பம் முதல் தடுமாறத்தொடங்கியது. இளம் வீராங்கனை விஷ்மி குணரத்ன, சமரி அதபத்து மற்றும் ஹர்ஷிதா மாதவி போன்ற முன்னணி வீராங்கனைகள் விக்கெட்டுகளை பறிகொடுக்க 27 ஓட்டங்களுக்கு இலங்கை மகளிர் அணி தங்களுடைய முதல் மூன்று விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனைத்தொடர்ந்து கவீஷா டில்ஹாரி இலங்கை அணிக்காக ஓட்டங்களை குவித்தபோதும், ஓட்டவேகம் இந்திய அணியின் வெற்றியிலக்கை எட்டுவதற்கு போதுமானதாக இருக்கவில்லை. எனவே, இலங்கை அணியானது 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 104 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இலங்கை அணிக்காக அதிகபட்சமாக கவீஷா டில்ஹாரி ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, சமரி அதபத்து 16 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இந்திய அணியின் பந்துவீச்சில் ராதா யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதேவேளை மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்றுள்ள இந்திய மகளிர் அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிப்பதுடன், இரண்டாவது T20I போட்டி எதிர்வரும் 25ம் திகதி நடைபெறவுள்ளது.

Result


Sri Lanka Women
104/5 (20)

India Women
138/6 (20)

Batsmen R B 4s 6s SR
Shafali Verma c Nilakshi de Silva b Chamari Athapaththu 31 31 4 0 100.00
Smriti Mandhana c Chamari Athapaththu b Oshadi Ranasinghe 1 6 0 0 16.67
S Meghna c Chamari Athapaththu b Oshadi Ranasinghe 0 1 0 0 0.00
Harmanpreet Kaur lbw b Inoka Ranaweera 22 20 3 0 110.00
Jemimah Rodrigues not out 36 27 3 1 133.33
Richa Ghosh st Anushka Sanjeewani b Inoka Ranaweera 11 15 1 0 73.33
Pooja Vastrakar b Inoka Ranaweera 14 12 2 0 116.67
Deepti Sharma b 17 8 3 0 212.50


Extras 6 (b 0 , lb 1 , nb 0, w 5, pen 0)
Total 138/6 (20 Overs, RR: 6.9)
Bowling O M R W Econ
Udeshika Prabodhani 4 0 21 0 5.25
Sugandika Kumari 3 0 18 0 6.00
Oshadi Ranasinghe 3 0 22 2 7.33
Ama Kanchana 1 0 8 0 8.00
Inoka Ranaweera 4 0 30 3 7.50
Chamari Athapaththu 2 0 7 1 3.50
Kavisha Dilhari 3 0 31 0 10.33


Batsmen R B 4s 6s SR
Vishmi Gunaratne lbw b Deepti Sharma 1 5 0 0 20.00
Chamari Athapaththu c Rajeshwari Gayakwad b Poonam Yadav 16 19 2 0 84.21
Harshitha Madavi c Deepti Sharma b Poonam Yadav 10 17 1 0 58.82
Kavisha Dilhari not out 47 49 6 0 95.92
Nilakshi de Silva c Harmanpreet Kaur b Pooja Vastrakar 8 11 1 0 72.73
Ama Kanchana st Richa Ghosh b Shafali Verma 11 10 1 0 110.00
Anushka Sanjeewani not out 10 8 1 0 125.00


Extras 1 (b 0 , lb 1 , nb 0, w 0, pen 0)
Total 104/5 (20 Overs, RR: 5.2)
Bowling O M R W Econ
Renuka Singh 4 0 25 0 6.25
Deepti Sharma 3 1 9 1 3.00
Radha Yadav 4 0 22 2 5.50
Pooja Vastrakar 4 1 12 1 3.00
Rajeshwari Gayakwad 1 0 7 0 7.00
Harmanpreet Kaur 2 0 17 0 8.50
Shafali Verma 2 0 10 1 5.00



>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<