LPL தொடரின் வெளிநாட்டு வீரர்கள் பதிவுக்கான கால எல்லை நீடிப்பு

Lanka Premier League 2022

167

இலங்கையில் இவ்வருடம் நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான வெளிநாட்டு வீரர்களை பதிவுசெய்வதற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

LPL தொடருக்கான வீரர்கள் பதிவினை கடந்த 14ம் திகதி இலங்கை கிரிக்கெட் சபை ஆரம்பித்திருந்ததுடன், எதிர்வரும் 23ம் திகதியுடன் வீரர்கள் பதிவுகள் நிறைவடையும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது.

LPL தொடரின் வெளிநாட்டு வீரர்களுக்கான பதிவுகள் இன்று முதல் ஆரம்பம்

எனினும் வெளிநாட்டு வீரர்கள் மற்றும் அணி உரிமையாளர்களின் கோரிக்கையின்படி, வீரர்களை பதிவுசெய்வதற்கான திகதியை எதிர்வரும் 28ம் திகதிவரை இலங்கை கிரிக்கெட் சபை நீடித்துள்ளது.

இவ்வருடத்துக்கான வீரர்கள் வரைவில் இடம்பெறவுள்ள வெளிநாட்டு வீரர்கள் இண்டெர்நெசனல் ரூபி, இண்டெர்நெசனல் ஷப்பீர், இண்டெர்நெசனல் டையமண்ட் ஏ, பி மற்றும் இண்டெர்நெசனல் பிளட்டினம் என்ற பிரிவுகளில் வகைப்படுத்தப்படவுள்ளனர்.

மூன்றாவது தடவையாக ஆரம்பிக்கவுள்ள லங்கா பிரீமியர் லீக் தொடர் அடுத்த மாதம் 31ம்  திகதி முதல்  ஆகஸ்ட் 21ம் திகதிவரை நடைபெறவுள்ளது. தொடரின் ஆரம்பக்கட்ட போட்டிகள் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், பிற்பகுதி போட்டிகள் ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<