சென். லூசியா அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராகும் டெரன் சமி

Caribbean Premier League 2022

129

மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள இந்த பருவகாலத்துக்கான கரீபியன் பிரீமியர் லீக்கில் (CPL) சென்.லூசியா கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளராக டெரன் சமி நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக சென். லூசியா கிங்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவந்த எண்டி பிளவருக்கு பதிலாக டெரன் சமி நியமிக்கப்பட்டுள்ளார் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து உலக சாதனை

CPL தொடர் ஆரம்பித்த 2013ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டுவரை சமி தொடரில் விளையாடியதுடன், கடந்த ஆண்டு சென். லூசியா கிங்ஸ் அணியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். எனினும், தலைவர் பதவியிலிருந்து விலகிய இவர், அணியின் ஆலோசகர் மற்றும் அணிப்பிரகமுகராக நியமிக்கப்பட்டார்.

சமி அணித்தலைவராக செயற்பட்ட காலப்பகுதியில் சென். லூசியா கிங்ஸ் அணி 7 வருடங்களுக்கு பின்னர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதுடன், தொடர்ச்சியாக 2 வருடங்கள் இறுதிப்போட்டிவரை முன்னேறியிருந்தது. எனினும், துரதிஷ்டவசமாக கிண்ணத்தை தவறவிட்டிருந்தது.

டெர் சமி உத்தியோகபூர்வமாக அனைத்துவகை போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவிக்காத நிலையில், தற்போது அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். டெரன் சமி இதற்கு முன்னர் பாகிஸ்தான் சுபர் லீக்கில் பேஸ்வர் ஷல்மி அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டுள்ளார்.

இந்த பருவகாலத்துக்கான CPL தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் 30ம் திகதி ஆரம்பிக்கவுள்ளதுடன், செப்டம்பர் 30ம் திகதி நிறைவுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<