இங்கிலாந்து டெஸ்ட் அணியில் மீண்டும் ஜேம்ஸ் அன்டர்சன்

97

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட  டெஸ்ட் தொடரில், முதல் இரண்டு போட்டிகளுக்கான 13 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணிக் குழாம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

குட்டி மாலிங்கவைப் புகழும் MS டோனி

அறிவிக்கப்பட்டிருக்கும் டெஸ்ட் குழாத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடாது போன அனுபவ வேகப்பந்துவீச்சாளர்களான ஜேம்ஸ் அன்டர்சன் மற்றும் ஸ்டுவார்ட் ப்ரோட் ஆகிய வீரர்கள் இணைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பென் ஸ்டோக்ஸ் மூலம் வழிநடாத்தப்படவிருக்கும் இந்த டெஸ்ட் குழாத்தின் பயிற்றுவிப்பாளராக நியூசிலாந்தின் முன்னாள் வீரரான பிரன்டண் மெக்கலம் செயற்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அதுதவிர கிறிஸ் வோக்ஸ், ஜொப்ரா ஆர்ச்சர், சேம் கர்ரன், மார்க் வூட், மற்றும் சகீப் மஹ்மூட் ஆகிய வீரர்கள் காயம் காரணமாக நியூசிலாந்து தொடரில் ஆடும் வாய்ப்பினை இழந்திருக்கின்றனர்.

இதேநேரம் உள்ளூர் கவுண்டி போட்டிகளில் சிறப்பாக செயற்பட்ட துடுப்பாட்டவீரர் ஹர்ரி ப்ரூக் மற்றும் பந்துவீச்சாளர் மெதிவ் பொட்ஸ் ஆகிய வீரர்களுக்கும் இந்த டெஸ்ட் குழாத்தில் முதன்முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த வீரர்களில் ஹர்ரி ப்ரூக் உள்ளூர் போட்டிகளில் 758 ஓட்டங்களை குவித்திருக்க, பொட்ஸ் 35 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் ஜூன் மாதம் 02ஆம் திகதி லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாக, தொடரின் இரண்டாம் மூன்றாம் டெஸ்ட் போட்டிகள் நொட்டிங்கம் மற்றும் லீட்ஸ் ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முதல் இரண்டு போட்டிகளுக்குமான இங்கிலாந்து குழாம் – பென் ஸ்டோக்ஸ் (அணித்தலைவர்), ஜேம்ஸ் அன்டர்சன், ஜொனதன் பெயார்ஸ்டோவ், ஹர்ரி புரூக், ஷேக் கிராவ்லி, பென் போக்ஸ், ஜேக் லீச், அலெக்ஸ் லீஸ், கிரைக் ஒவர்டன், மெதிவ் பொட்ஸ், ஒல்லி போபே, ஜோ ரூட்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<