இலங்கை வீரர்களுக்கான T20 தொடர் அடுத்த வாரம்

344

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களை இந்த ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்திற்கு தயார்படுத்தும் நோக்குடன் இலங்கை கிரிக்கெட் சபை ஒழுங்கு செய்துள்ள உள்ளூர் T20 தொடர் இம்மாதம் 12ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இசுரு உதான திடீர் ஓய்வு

தென்னாபிரிக்க – இலங்கை அணிகள் இடையிலான கிரிக்கெட் போட்டிகளுக்கு  முன்னர் நடைபெறவிருக்கும் இந்த T20 தொடர், கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளதோடு, இந்த தொடரில் ப்ளூஸ், ரெட்ஸ், கீரின்ஸ் மற்றும் கிரேஸ் என வர்ணங்களை பிரதிநிதித்துவம் செய்யும் அணிக்கு 15 பேர் கொண்ட நான்கு அணிகள் பங்கேற்கவுள்ளன.

இதேநேரம், இந்த தொடரில் பங்கேற்கின்ற அணிகள் மொத்தம் தலா 06 குழுநிலைப் போட்டிகளில் விளையாடவிருப்பதோடு, குறித்த போட்டிகளுக்கு வழங்கப்படும் புள்ளிகளின் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள், இந்த தொடரின் இறுதிப் போட்டியில் எதிர்வரும் 24ஆம் திகதி பலப்பரீட்சை நடாத்தவுள்ளன.

மறுமுனையில், இந்த T20 தொடரின் குழுநிலைப் போட்டிகள் தொடருக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் நாட்களில் மதியம் 2.30 மணிக்கும், இரவு 7 மணிக்கும் என இரண்டு வெவ்வேறு நேரங்களில் நாளொன்றுக்கு இரண்டு போட்டிகளாக இடம்பெறும் எனக்  குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இலங்கை அணிக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் சன்மானம்

இந்த T20 தொடர் பற்றி கருத்து வெளியிட்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரியான ஏஷ்லி டி சில்வா, இந்த T20 தொடர் வீரர்களுக்கு மிகவும் தேவையாக இருக்கும் பயிற்சிகளை வழங்குவதற்கு கிடைக்கப்பட்ட சிறந்த சந்தர்ப்பமாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<