Home Tamil இந்தியாவிற்கு அதிர்ச்சி கொடுத்து T20 தொடரை வென்ற இலங்கை

இந்தியாவிற்கு அதிர்ச்சி கொடுத்து T20 தொடரை வென்ற இலங்கை

288

சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான T20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில், இலங்கை அணி 7 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினை பதிவு செய்திருப்பதுடன் மூன்று போட்டிகள் கொண்ட தொடரினையும் 2-1 எனக் கைப்பற்றியிருக்கின்றது. 

அசலன்கவின் போராட்டம் வீண்: முதல் T20i இந்தியா வசம்

மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் 1-1 என சமநிலை அடைந்த நிலையில், தொடரினை தீர்மானிக்கும் மூன்றாவதும் இறுதியுமான போட்டி வியாழக்கிழமை (29) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகியது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் தலைவர் ஷிக்கர் தவான் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தனது தரப்பிற்காகப் பெற்றார். 

இப்போட்டிக்கான இலங்கை அணி காயமடைந்த இசுரு உதானவிற்குப் பதிலாக அணியில் பெதும் நிஸ்ஸங்கவினை இணைக்க, இந்திய கிரிக்கெட் அணியும் நவ்தீப் சைனிக்குப் பதிலாக வேகப் பந்துவீச்சாளரான சந்தீப் வாரியருக்கு T20 சர்வதேச போட்டிகளில் முதல்தடவையாக விளையாடும் வாய்ப்பினை வழங்கியது. 

இலங்கை – அவிஷ்க பெர்ணான்டோ, மினோத் பானுக்க, பெதும் நிஸ்ஸங்க, சதீர சமரவிக்ரம, தனன்ஞய டி சில்வா, ரமேஷ் மெண்டிஸ், தசுன் ஷானக்க (தலைவர்), வனிந்து ஹஸரங்க, சாமிக கருணாரட்ன, அகில தனன்ஞய, துஷ்மன்த சமீர

இந்தியா – ஷிக்கர் தவான் (தலைவர்), ருத்திராஜ் கய்க்வாட், சஞ்சு சம்சன்,டேவ்தட் படிக்கல், நிதிஷ் ரானா, சேட்டன் சக்கர்யா, ராகுல் சாஹர், வருண் சக்கரவர்த்தி, புவ்னேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், சந்தீப் வாரியர்

தொடர்ந்து நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இந்திய கிரிக்கெட் அணி, ஆரம்பம் முதலே மிகவும் மோசமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருந்ததோடு இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளரான வனிந்து ஹஸரங்கவின் பந்துவீச்சினை எதிர்கொள்வதிலும் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டிருந்தது. 

IPL தொடரில் ஆடுவாரா வனிந்து ஹஸரங்க??

அதன்படி, தொடர்ச்சியான முறையில் விக்கெட்டுக்களை பறிகொடுக்கத் தொடங்கிய இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 81 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. 

இந்திய அணியின் துடுப்பாட்டம் சார்பில் குல்தீப் யாதவ் 23 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பில் வீரர் ஒருவர் பெற்ற கூடுதல் ஓட்டங்களைப் பதிவு செய்தார். 

மறுமுனையில் இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் வெறும் 9 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய வனிந்து ஹஸரங்க, T20 சர்வதேசப் போட்டிகளில் தன்னுடைய சிறந்த பந்துவீச்சினை பதிவு செய்ய இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக்கவும் 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார். 

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 82 ஓட்டங்களை பெறுவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை கிரிக்கெட் அணி, குறித்த வெற்றி இலக்கினை 14.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 82 ஓட்டங்களுடன் அடைந்தது.  

களத்தில் ஆட்டமிழக்காது இறுதிவரை இருந்த தனன்ஞய டி சில்வா 23 ஓட்டங்களைப் பெற்றும், வனிந்து ஹஸரங்க 14 ஓட்டங்கள் பெற்றும் இலங்கை அணியின் வெற்றியினை உறுதி செய்தனர். 

இந்திய அணியின் பந்துவீச்சு சார்பில் ராகுல் சாஹர் 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி இலங்கை அணிக்கு சிறிய அழுத்தம் ஒன்றினை உருவாக்கிய போதும் அவரின் பந்துவீச்சு வீணானது. 

Video – எதிரணிகளுக்கு ஆச்சரியம் கொடுக்கும் ஹசரங்க, சாமிக்க!

இப்போட்டியின் வெற்றியுடன் இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணி கைப்பற்றியுள்ள T20 தொடர், இந்திய அணிக்கு எதிராக இலங்கை வீரர்கள் கைப்பற்றிய முதல் T20 தொடராக அமைகின்ற அதேவேளை, இலங்கை அணி 2019ஆம் ஆண்டிற்குப் பின்னர் வெற்றி பெறுகின்ற முதல் T20 தொடராகவும் அமைகின்றது. 

போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும்  இலங்கை அணியின் இளம் சகலதுறை வீரரான வனிந்து ஹஸரங்க தெரிவாகினார். 

போட்டியின் சுருக்கம்

A PHP Error was encountered

Severity: Warning

Message: Invalid argument supplied for foreach()

Filename: controllers/Embed.php

Line Number: 86

Backtrace:

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/controllers/Embed.php
Line: 86
Function: _error_handler

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/index.php
Line: 315
Function: require_once


A PHP Error was encountered

Severity: Warning

Message: Invalid argument supplied for foreach()

Filename: embed/match_result.php

Line Number: 115

Backtrace:

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/views/embed/match_result.php
Line: 115
Function: _error_handler

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/controllers/Embed.php
Line: 92
Function: view

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/index.php
Line: 315
Function: require_once



முடிவு – இலங்கை அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி 

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…