நொக் அவுட் சுற்றுக்குள் சென்ற ஜெர்மனி, போர்த்துக்கல், பிரான்ஸ், ஸ்பெயின்

UEFA EURO 2020

196
Sweden vs Poland, Slovakia vs Spain, Germany vs Hungary, Portugal vs France

யூரோ 2020 கால்பந்து தொடரில் புதன்கிழமை (23) இடம்பெற்ற லீக் போட்டிகளின் நிறைவில்  ஜெர்மனி, போர்த்துக்கல், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் சுவீடன் அணிகள் அடுத்த சுற்றான காலிறுதிக்கு முன்னைய சுற்றுக்கு தெரிவாகியுள்ளன. 

சுவீடன் எதிர்  போலந்து 

சென் பீட்டர்ஸ்பேர்க் அரங்கில் இடம்பெற்ற குழு E இற்கான இந்த போட்டி ஆரம்பமாகி இரண்டாவது நிமிடத்தில் Forsberg சுவீடன் அணிக்கான முதல் கோலையும் 59 நிமிடத்தில் இரண்டாவது கோலையும் பெற்றார். 

>> யூரோ அடுத்த சுற்றுக்குள் நுழைந்த இங்கிலாந்து, குரோசியா அணிகள்

எனினும், போலந்து அணியின் தலைவர் லெவண்டொஸ்கி 61ஆவது மற்றும் 84ஆவது நிமிடங்களில் இரண்டு கோல்களைப் பெற்று, ஆட்டத்தை சமப்படுத்ததினார். 

பின்னர், போட்டியின் உபாதையீடு நேரத்தில் Claesson சுவீடன் அணிக்கான வெற்றி கோலைப் பெற்றுக் கொடுத்தார். 

எனவே, லீக் சுற்றில் இரண்டு வெற்றிகள் மற்றும் ஒரு சமநிலையான முடிவுடன் குழு E இல் முதலிடம் பெற்ற சுவீடன் அணி காலிறுதிக்கு முன்னைய சுற்றுக்கு தெரிவாகியது. 

போலந்து அணி இரண்டு தோல்விகள் மற்றும் ஒரு சமநிலையுடன் வெறும் ஒரு புள்ளியைப் பெற்று குழுவில் இறுதி இடத்தைப் பெற்று தொடரில் இருந்து வெளியேறியது.   

முழு நேரம்: சுவீடன் 3 – 2 போலந்து

கோல் பெற்றவர்கள் 

  • சுவீடன் – Forsberg 2’& 59′, Claesson 90’+4’
  • போலந்து –  Lewandowski 61’& 84′ 

ஸ்லோவோக்கியா எதிர் ஸ்பெயின் 

குழு E இல் இருந்து அடுத்த சுற்றுக்குத் தெரிவாக வேண்டும் என்றால் கட்டாய வெற்றி பெற வேண்டிய நிலையில் இவ்விரு அணிகளும் ஸ்பெயினின் La Cartuja அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் களமிறங்கின. 

போட்டியின் ஆரம்பத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பின்போது ஸ்பெயின் முன்கள வீரர் மொராடா உதைந்த பந்தை ஸ்லோவோக்கியா கோல் காப்பாளர் தடுத்தார். 

எனினும், 30 நிமிடங்களின் பின்னர் இரண்டு கோல்களைப் பெற்ற ஸ்பெயின் முதல் பாதியில் முன்னிலை பெற்றது. 

பின்னர், இரண்டாம் பாதியிலும் 25 நிமிடங்களுக்குள் அடுத்தடுத்து 3 கோல்களைப் பெற்ற ஸ்பெயின் 5-0 என வெற்றி பெற்று, குழு E இல் இரண்டாம் இடத்தைப் பெற்று சுவீடன் அணியுடன் அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியது. 

இந்த வெற்றியானது தொடரில் ஒரு அணி பெற்ற மிகப் பெரிய வெற்றியாகப் பதிவாகியது. 

முழு நேரம்: ஸ்லோவோக்கியா 0 – 5 ஸ்பெயின்

கோல் பெற்றவர்கள்   

  • ஸ்பெயின் – Dúbravka 30′(OG), Laporte 45’+3, Sarabia 56′, Ferran Torres 67′, Kucka 71′ og

ஜெர்மனி எதிர் ஹங்கேரி 

இந்தத் தொடரில் மிகவும் பலமான அணிகளைக் கொண்ட F குழுவுக்கான இறுதி இரண்டு ஆட்டங்களும் 4 அணிகளுக்கும் தீர்மானம் மிக்க போட்டிகளாகவே இருந்தன. 

இந்நிலையில் ஜெர்மனியின் முனிச் கால்பந்து அரங்கில் இடம்பெற்ற இந்த போட்டியின் 11ஆவது நிமிடத்தில் Adam Szalai முதல் கோலைப் பெற்று, உலக சம்பியன் ஜெர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்தார். 

இந்த முன்னிலை 66ஆவது நிமிடம் வரை நீடித்தது. எனினும், 66ஆவது நிமிடம் ஜெர்மனி முன்கள வீரர் கை ஹவேர்ட்ஸ் அவ்வணிக்கான முதல் கோலைப் பெற்றார். அடுத்த இரண்டு நிமிடங்களில் Schäfer அடுத்த கோலைப் பெற்றுக் கொடுத்து மீண்டும் ஹங்கேரியை முன்னிலைப் படுத்தினார்.  

>> அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்த ஆஸ்திரியா, டென்மார்க்

எனினும், 84ஆவது நிமிடத்தில் ஜேர்மனி அணிக்கான இரண்டாவது கோலை Goretzka பெற்றுக் கொடுத்து போட்டியை சமப்படுத்தினார். எனவே, மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இந்த மோதலின் முடிவில் ஜெர்மனி லீக் தொடரில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி மற்றும் ஒரு சமநிலையான முடிவுடன் 4 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டது. 

முழு நேரம்: ஜெர்மனி 2 – 2 ஹங்கேரி 

கோல் பெற்றவர்கள்   

  • ஜெர்மனி – Havertz 66′, Goretzka 84′ 
  • ஹங்கேரி – Adam Szalai 11′ Schäfer 68′

பொர்த்துக்கல் எதிர் பிரான்ஸ்

ஹங்கேரியின் பஸ்காஸ் அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் 31ஆம் நிமிடத்தில் போர்த்துக்கல் அணிக்கு ரொனால்டோவும், பிரான்ஸ் அணிக்கு முதல் பாதியின் உபாதையீடு நேரத்தில் கரீம் பென்செமாவும் தமக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பின்போது கோலைப் பெற்றுக் கொடுத்தனர். 

எனினும், இரண்டாம் பாதி ஆரம்பமாகி இரண்டு நிமிடங்களில் பிரான்ஸ் அணித் தலைவர் பென்செமா அணிக்கான இரண்டாம் கோலையும் பெற்று பிரான்ஸை முன்னிலைப் படுத்தினார். 

மீண்டும், 60ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பின்போது போர்த்துக்கல் அணிக்கான இரண்டாவது கோலையும் ரொனால்டோ பெற்றுக் கொடுத்தார். இது ரொனால்டோ சர்வதேச போட்டிகளில் பெற்ற 109ஆவது கோலாக பதிவானது. 

எனினும், இந்தப் போட்டியின்போது நடுவர் வழங்கிய தீர்ப்புகள் குறித்து பல வீரர்களும் அதிருப்தியடைந்ததைக் காண முடிந்தது. 

இந்தப்  போட்டியும் தலா இரண்டு கோல்களுடன் நிறைவுபெற குழு F இல் பிரான்ஸ் 5 புள்ளிகளுடன் முதலிடம் பெற, போர்த்துக்கல் மற்றும் ஜெர்மனி  அணிகள் தலா ஒரே முடிவுகளுடன் தலா 4 புள்ளிகளைப் பெற்றன. 

எனினும், ஜெர்மனி இரண்டாம் இடத்தைப் பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாக, சிறந்த பெறுபேற்றுடன் மூன்றாம் இடத்தைப் பெற்ற போர்த்துக்கல் அணியும் அடுத்த சுற்றுக்குத் தெரிவானது.  

லீக் சுற்றில் 4 குழுக்களில் இருந்து சிறந்த பெறுபேற்றுடன் மூன்றாம் இடம் பெற்ற அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முழு நேரம்: பொர்த்துக்கல் 2 – 2 பிரான்ஸ்

கோல் பெற்றவர்கள்   

  • பொர்த்துக்கல் – ரொனால்டோ 31′(p) & 60′(p) 
  • பிரான்ஸ் – கரீம் பென்செமா 45’+2 (p), 47′

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<