இலங்கைக்கு எதிரான இங்கிலாந்து T20 குழாம் அறிவிப்பு

122
Getty Images

சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெறவுள்ள T20 தொடரில் பங்கேற்கவுள்ள 16 பேர் அடங்கிய இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டிருக்கின்றது. 

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி, அங்கே மூன்று போட்டிகள் கொண்ட T20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகின்றது. 

ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ள இலங்கை – இந்திய தொடர்

இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக இரண்டு அணிகளும் பங்குபெறும் T20 தொடர் நடைபெறவுள்ள நிலையில், இந்த T20 தொடருக்கான இங்கிலாந்து அணியே வெளியிடப்பட்டிருக்கின்றது. 

இயன் மோர்கன் தலைமையிலான இந்த அணியில் கடந்த 2015ஆம் ஆண்டிலேயே T20 சர்வதேச போட்டியொன்றில் விளையாடிய சகலதுறைவீரரான கிறிஸ் வோக்ஸ் இணைக்கப்பட்டிருக்கின்றார். இதேநேரம், 2019ஆம் ஆண்டில் கடைசியாக T20 போட்டியொன்றில் விளையாடிய டேவிட் வில்லியிற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. இவர்களோடு நீண்ட இடைவெளி ஒன்றின் பின்னர், சகலதுறைவீரரான லியாம் டாவ்சனுக்கும் T20 போட்டிகளில் திறமையினை வெளிப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கின்றது. 

எனினும், உபாதைகள் காரணமாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திரவீரர்களான பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜொப்ரா ஆர்ச்சர் ஆகியோர் இலங்கை அணிக்கு எதிரான T20 தொடரில் தெரிவு செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

தவான் தலைமையில் இலங்கை வரும் இந்திய கிரிக்கெட் அணி

அறிவிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து T20 அணியினை நோக்கும் போது அதன் துடுப்பாட்டத்துறையினை ஜோஸ் பட்லர், மொயின் அலி, சேம் பில்லிங்ஸ், ஜொன்னி பெயர்ஸ்டோவ் ஆகிய வீரர்களுடன் இணைந்து டாவிட் மலான் பலப்படுத்துகின்றார். 

மறுமுனையில், இங்கிலாந்து அணியின் பந்துவீச்சுத்துறையினை சேம் கர்ரன், டொம் கர்ரன், கிறிஸ் ஜோர்டன் போன்றோருடன் இணைந்து ஆதில் ரஷீட் பலப்படுத்துகின்றார். 

“உலகக் கிண்ணத்துக்கு நேரடி தகுதி பெறுவதே எமது இலக்கு” – பிரமோதய

இந்த T20 தொடர் இலங்கை, இங்கிலாந்து என இரு அணிகளுக்கும் இந்த ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்திற்கான பயிற்சியாக  அமையும் என எதிர்பார்க்கப்பட்டிருக்கின்றது. 

T20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளும் எதிர்வரும் 23ஆம் மற்றும் 24ஆம் திகதிகளில் கார்டிப் நகரில் இடம்பெற, தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி ஜூன் 26ஆம் திகதி சௌத்தம்ப்டன் நகரில் இடம்பெறுகின்றது.

இங்கிலாந்து T20 அணி – இயன் மோர்கன் (தலைவர்), மொயின் அலி, ஜொன்னி பெயர்ஸ்டோவ்,  சேம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், டொம் கர்ரன், லியாம் டாவ்சன், கிறிஸ் ஜோர்டன், லியாம் லிவிங்ஸ்டன், டாவிட் மலான், ஆதீல் ரஷீட், ஜேசன் ரோய், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…