உலக வில்வித்தைப் போட்டியில் இலங்கை வீரர் ரஜீவ்வுக்கு தங்கம்

116

உலகக் கிண்ண வில்வத்தைப் போட்டியின் ரிகர்வ் பிரிவில் இலங்கை வீரர் ரஜீவ் டி சில்வா தங்கப் பத்தகம் வென்றார். உலகக் கிண்ண வில்வித்தை போட்டியில் தனிநபர் பிரிவில் அவர் வென்ற முதலாவது தங்கம் இதுவாகும். 

எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான தகுதிகாண் போட்டிகளின்ர் அங்கமாக சுவிட்சர்லாந்தின் லொசேன் நகரில் ஹூண்டாய் உலக திறந்தவெளி வில்வித்தை சம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது.

இதில் ஆண்களுக்கான ஒற்றையர் போட்டியானரிகர்வ்ஹோம்ஸ்போட்டியில் பங்கேற்ற இலங்கை வீரர் ரஜீவ் டி சில்வா, 70 மீட்டர் முதல் பாதியில் 326 புள்ளிகளையும், 70 மீட்டர் இரண்டாம் பாதியில் 330 புள்ளிகளையும் பெற்று மொத்தம் 656 புள்ளிகளுடன் முதலாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்

ஆசிய குத்துச்சண்டை போட்டியில் வெண்கலம் வென்றார் நதீக்கா

இதனிடையே, கொலம்பியா நாட்டைச் சேர்ந்த சென்டியாகோ அர்விலாட மற்றும் ஜோங் என்ரிக்ஸ் ஆகிய இருவரும் இந்தப் போட்டியில் முறையே இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பெற்றுக்கொண்டனர்.

உலக வில்வித்தை சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போட்டித் தொடரானது கடந்த மார்ச் மாதம் 6ஆம் திகதி முதல் ஜுன் 6ஆம் திகதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது.

இதனிடையே, டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான தகுதிகாண் போட்டியாக உலக வில்வித்தை சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மற்றுமொரு சர்வதேசப் போட்டித் தொடர் அடுத்த வாரம் பிரான்ஸில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<