ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் சம்மி சில்வாவுக்கு புதிய பதவி

Asian Cricket Council

148

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் சம்மி சில்வா, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின், நிதி மற்றும் சந்தைப்படுத்தல்  குழுவின் தலைவாக நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விடயத்தினை ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் மற்றும் இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

ஒருநாள் தரவரிசையில் முன்னேற்றம் காண்பித்த இலங்கை வீரர்கள்

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜெய் ஷா, “ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் நிதி மற்றும் சந்தைப்படுத்தல்  குழுவின் தலைவாக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக சம்மி சில்வாவை நியமிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என தெரிவித்தார்.

கிரிக்கெட் சபை தேர்தலில் வெற்றிபெற்ற சம்மி சில்வா கடந்த மாதம், இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அவருக்கு மற்றுமொரு பொறுப்பினை வழங்கியுள்ளது.

இதேவேளை, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ள புதிய நிதி மற்றும் சந்தைப்படுத்தல்  குழுவில், ஜெய் ஷா, நஜ்முல் ஹசன் (பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தலைவர்), பன்கஜ் கஹிம்ஜி (அபிவிருத்தி குழாத்தின் தலைவர்), ஹமிட் ஷின்வாரி (ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை), ராஹுல் ஷர்மா (ஹொங்கொங் கிரிக்கெட் சபை) மற்றும் நதீம் நட்வி (சவுதி அரேபிய கிரிக்கெட் சபை) ஆகியோர் அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக இருந்த சம்மி சில்வா, கொவிட்-19 தொற்று காலப்பகுதியில், லங்கா ப்ரீமியர் லீக் தொடரை வெற்றிகரமாக நடத்தியதுடன், இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான தொடர்களையும் நடத்தியிருந்தார்.

இறுதியாக, இலங்கை கிரிக்கெட் சபையின் பொருளாதார பலத்தை மேம்படுத்தும் முகமாக இந்திய அணிக்கு எதிராக திட்டமிடப்பட்டிருந்த போட்டிகளை அதிகரிக்கவும், இந்திய கிரிக்கெட் சபையிடம் கலந்துரையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<