அனுப வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய இலங்கை தேர்வுக்குழு

Sri Lanka tour of Bangladesh 2021

131

பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து நீக்கப்பட்டதாக கூறப்படும், இலங்கை அணியின் அனுபவ வீரர்களுடன், இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

இளம் கிரிக்கெட் வீரர்களுடன் அணியை முன்னோக்கி அழைத்துச்செல்லும் நோக்குடன் இலங்கை கிரிக்கெட் சபை புதிய திட்டங்களை வகுத்து வருகின்றது. அதன் முதற்கட்டமாக இளம் வீரர்கள் கொண்ட குழாத்தை பங்களாதேஷ் தொடருக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவிஷ்க குணவர்தனவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீக்கிய ICC

அந்தவகையில் ஒருநாள் போட்டிகளுக்கான தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட திமுத் கரணாரத்ன, அஞ்சலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், நுவான் பிரதீப், ரொஷேன் சில்வா மற்றும் டில்ருவான் பெரேரா ஆகிய அனுப வீரர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

எனினும், குறித்த இந்த சந்திப்புக்கு முதல், பங்களாதேஷ் தொடரின் போது, திமுத் கருணாரத்னவிடம் இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழு பேச்சுவதார்த்தை நடத்தியுள்ளது.

அனுபவ வீரர்களுக்கான இந்த சந்திப்பின் போது, இலங்கை கிரிக்கெட் அணியின் எதிர்கால திட்டங்கள் மற்றும் மூலோபாயங்களை தெளிவுப்படுத்தப்பட்டதுடன், அணியிலிருந்து முன்னணி வீரர்கள் நீக்கப்பட்டதற்கான அல்லது ஓய்வு வழங்கப்பட்டதற்கான காரணங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. அதேநேரம், அனுப வீரர்கள் முழுமையாக நீக்கப்படவில்லை எனவும், பங்களாதேஷ் தொடரிலிருந்து மாத்திரம் நீக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டில்ருவான் பெரேரா மற்றும் ரொஷேன் சில்வா அழைக்கப்பட்டு, டெஸ்ட் போட்டிகளுக்கான அவர்களுடைய பங்களிப்பு, எதிர்கால திட்டங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, இந்த சந்திப்புக்கு திசர பெரேரா அழைக்கப்பட்டிருந்த போதும், அவர் ஓய்வுபெற்றதன் காரணமாக சந்திப்பில் கலந்துக்கொள்ளவில்லை. அதேநேரம், தலைமை பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் சந்திப்பில் பங்கேற்கவில்லை என்பதுடன், அவர் ஏற்கனவே இதுதொடர்பில் வீரர்களுடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் 16ம் திகதி புறப்படவுள்ளதுடன், முதல் போட்டி எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க….