பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்க மகேஷ் ஜயகொடி தகுதி

Tokyo Paralympics Games - 2021

163

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு பின்னர் இடம்பெறவுள்ள பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பை இலங்கை வீரர் மகேஷ் ஜயகொடி பெற்றுள்ளார். 

மேற்படி போட்டிகளில் விசேட தேவையுடைய ஆண்களுக்கான தனிநபர் துடுப்பு படகோட்ட போட்டிக்கு அவர் நேரடியாக தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டோக்கியோ பரா ஒலிம்பிக்கில் பங்கேற்க ஆறு இலங்கை வீரர்கள் தேர்வு

டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான ஆசியஓசியானா மண்டல துடுப்பு படகோட்டத்தின் தகுதி சுற்றுப் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்றுமுன்மதினம் (07) நிறைவுக்கு வந்தது.

இதில் ஆண்களுக்கான PRI தனிநபர் ஸ்கல்ஸ் பிரிவில் இலங்கையின் மகேஷ் ஜயகொடி முதலிடத்தைப் பெற்று, டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் பங்குபற்றுகின்ற வாய்ப்பை அவர் பெற்றுக்கொண்டார். போட்டியை அவர் 11 நிமிடங்கள் 04.23 செக்கன்களில் நிறைவுசெய்தார்

இதன்மூலம், பாராலிம்பிக் துடுப்பு படகோட்டப் போட்டிக்குத் தகுதிபெற்ற முதலாவது இலங்கை வீரர் என்ற பெருமையையும் மகேஷ் ஜயகொடி பெற்றுக்கொண்டார்

முன்னதாக 2019இல் நடைபெற்ற ஆசிய பாராலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தை அவர் வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

ஜிம்னாஸ்டிக் வீராங்கனை மில்காவுக்கு ஒலிம்பிக் வரம் கிடைக்குமா?

இந்தப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரர் எகென்பர்திவ் இரண்டாவது இடத்தையும், தாய்லாந்து வீரர் பி. கொமினுஜன் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்

இதனிடையே, பெண்களுக்கான இதே போட்டிப் பிரிவில் 2ஆவது இடத்தைப் பெற்ற இலங்கை வீராங்கனை சமிதா சமன்மலி பாராலிம்பிக் போட்டிக்கான வாய்ப்பை இழந்தார். இந்தப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை டொமோமி முதலிடத்தைப் பெற்று அசத்தினார்.  

முன்னதாக, 2019இல் தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய பாராலிம்பிக் விளையாட்டு விழாவில் சமிதா சமன்மலி பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தார்.

எனவே, மகேஷ் ஜயகொடியின் வெற்றியுடன் இம்முறை டோக்கியோ பாராலிம்பிக்குக்கு நான்கு இலங்கை வீரர்கள் தகுதிபெற்றுக்கொண்டனர்.

இதில் தினேஷ் பிரியன்த (ஆண்களுக்கான ஈட்டி எறிதல் எப்-46), சமித துலான் (ஆண்களுக்கான ஈட்டி எறிதல் F-44), சம்பத் பண்டார (அம்பு எறிதல் F-46) ஆகிய வீரர்கள் முன்னதாக டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகியது வட கொரியா

எதுஎவ்வாறாயினும், இம்முறை டோக்கியோ பாராலிம்பிக்கில் குறைந்தபட்சம் ஏழு வீரர்களை பங்கேற்கச் செய்வதற்கு இலங்கை பராலிம்பிக் சம்மேளனம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 24ஆம் திகதி முதல் செப்டம்பர் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க…