நியு யங்ஸை இலகுவாக வீழ்த்திய சீ ஹோக்ஸ் அணிக்கு மூன்றாவது வெற்றி

Super League 2021

133

சுகததாச அரங்கில் வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற சுபர் லீக் கால்பந்து தொடரின் மூன்றாவது வாரத்திற்கான முதல் போட்டியில் நியு யங்ஸ் கால்பந்து கழகத்தை 5-0 என இலகுவாக வீழ்த்திய சீ ஹோக்ஸ் கால்பந்து கழகம் இந்த தொடரில் தமது தொடர்ச்சியான மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தது. 

இதற்கு முன்னர் இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற சீ ஹோக்ஸ் அணி தரப்படுத்தலில் முதல் இடத்தில் இருந்தது. எனினும், நியு யங்ஸ் வீரர்கள் தமது முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து தரப்படுத்தலில் கடைசி இடத்தில் இருந்த நிலையில் தமது முதல் வெற்றிக்காக இந்தப் போட்டியில் களமிறங்கினர். 

வசீமின் ஹெட்ரிக்கோடு நியு யங்ஸை வீழ்த்திய அப் கண்ட்ரி லயன்ஸ்

போட்டி ஆரம்பித்த மூன்றாவது நிமிடத்தில் நியு யங்ஸ் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை டொஸ்ஸொ மமொளது பெற்றார். அவர் உதைந்த பந்தை சீ ஹோக்ஸ் கோல் காப்பாளர் உதயங்க பெரேரா பாய்ந்து தடுத்தார். 

ஆட்டத்தின் 29ஆவது நிமிடத்தில் மொஹமட் ஹஸ்மீர் சீ ஹோக்ஸ் அணிக்கான முதல்  கோலைப் பெற்றுக் கொடுத்தார். தொடர்ந்து 32 மற்றும் 45ஆவது நிமிடங்களில் ஜப்பான் வீரர் கனெஷிரோ சீ ஹோக்ஸ் அணிக்கான அடுத்த இரண்டு கோல்களையும் பெற, முதல் பாதி நிறைவில் அவ்வணி 3-0 என முன்னிலை வகித்தது. 

முழு நேரம்: சீ ஹோக்ஸ் கா.க 5 – 0 நியு யங்ஸ் கா.க  

இரண்டாம் பாதி ஆரம்பமாகி 11 நிமிடங்களில் ஹஸ்மீர் அணிக்கான அடுத்த கோலையும் பெற்றுக் கொடுதார். இதன்மூலம், தொடரில் இதுவரை 4 கோல்களைப் பெற்று அதிக கோல் பெற்றவர்களில் முதலிடத்தை ஹஸ்மீர் பெற்றார். 

தொர்ந்து 75ஆவது நிமிடத்தில் கனெஷிரொ அடுத்த கோலையும் பெற்று, தனது ஹெட்ரிக் கோலைப் பதிவு செய்தார். இது இந்த தொடரில் பதிவாகும் மூன்றாவது ஹெட்ரிக் கோலாகும்.  

எனவே, ஆட்டநிறைவில் சீ ஹோக்ஸ் அணி 5-0 என இலகுவாக வெற்றி பெற்று 3 வெற்றிகளுடன் சுபர் லீக் தொடரின் புள்ளிப் பட்டியலில் 9 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் நீடிக்கின்றது. 

கோல் பெற்றவர்கள் 

  • சீ ஹோக்ஸ் கா.க – மொஹமட் ஹஸ்மீர் 29‘ & 56‘, M. கனெஷிரொ 32‘, 45‘ & 75‘

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<