UAE அணியின் காதிர் அஹமட்டிற்கு 5 வருடப் போட்டித்தடை

104

ஆட்டநிர்ணய சர்ச்சையில் சிக்கிய ஐக்கிய அரபு இராச்சிய அணியின் வேகப்பந்துவீச்சாளரான காதிர் அஹமட்டிற்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் ஐந்து வருட (ICC) போட்டித்தடையினை வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

T20 போட்டிகளில் KL ராகுல் புதிய சாதனை

கடந்த 2019ஆம் ஆண்டில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்ற கிரிக்கெட் தொடருடன் சேர்த்து, பல இடங்களில் ஆட்டநிர்ணய சர்ச்சைகளில் சிக்கிய காதிர் அஹமட்டிற்கு, ஐ.சி.சி. இன் ஊழல் தடுப்பு பிரிவு கிரிக்கெட் சார்ந்த விடயங்கள் எதிலும் பங்கேற்ற ஐந்து வருடத் தடையினை வழங்கியிருக்கின்றது. 

பாகிஸ்தான் வம்சாவளியினைச் சேர்ந்த காதிர் அஹமட், ஆட்டநிர்ணய விடயங்கள் தொடர்பான தனது குற்றங்களை ஒப்புக்கொண்டிருப்பதாக ஐ.சி.சி. இன் ஊழல் தடுப்பு பிரிவினுடைய தலைவர் அலெக்ஸ் மார்ஷல் குறிப்பிட்டிருக்கின்றார்.

போட்டித்தடையினைப் பெற்றிருக்கும் 35 வயது நிரம்பிய காதிர் அஹ்மட், முன்னர் ஐக்கிய அரபு இராச்சிய அணிக்காக 11 ஒருநாள் போட்டிகளிலும், 10 T20 போட்டிகளிலும் விளையாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…