Home Tamil அகில ஹெட்ரிக்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசிய பொல்லார்ட்

அகில ஹெட்ரிக்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசிய பொல்லார்ட்

Sri Lanka tour of West Indies 2021

545

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் T20i போட்டி பல திருப்பங்களை ஏற்படுத்தியிருந்த போதும், மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுக்கொண்டது.

போட்டியின் நாண சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இலங்கை அணிக்கு வழங்கியது. அதன்படிஇலங்கை அணியின் பெதும் நிஸ்ஸங்க மற்றும் அஷேன் பண்டார ஆகியோர் சர்வதேச அறிமுகத்தை பெற்றதுடன்மேற்கிந்திய தீவுகள் அணியில  ெவின் சென்கிலையர் அறிமுகத்தை பெற்றார். 

இலங்கை அணி 

நிரோஷன் டிக்வெல்லதனுஷ்க குணதிலக்கபெதும் நிஸ்ஸங்கதினேஷ் சந்திமால்அஞ்செலோ மெதிவ்ஸ் (தலைவர்)அஷேன் பண்டாரதிசர பெரேராவனிந்து ஹசரங்கஅகில தனன்ஜயதுஷ்மந்த சமீரநுவான் பிரதீப் 

மேற்கிந்திய தீவுகள் அணி 

லெண்டல் சிம்மன்ஸ்எவின் லிவிஸ்க்ரிஸ் கெயில்நிக்கோலஸ் பூரன்கீரன் பொல்லார்ட் (தலைவர்)ஜேசன் ஹோல்டர்பெபியன் எலன்டுவைன் பிராவோகெவின் சென்கிலையர்ஒபெட் மெக்கோஸ்பிடெல் எட்வர்ட்ஸ் 

>> பெதும் நிஸ்ஸங்கவின் திறமையைக்கண்டு வியக்கும் மிக்கி ஆர்தர்!

மேற்கிந்திய தீவுகள் அணியின் பணிப்பின்படிமுதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிஆரம்பத்தில் விக்கெட்டுகளை தொடர்ச்சியாக விட்டுக்கொடுக்க தவிறனாலும்குறைந்த ஓட்ட வேகத்துடன் துடுப்பெடுத்தாடியதுஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க மாத்திரம் 4 ஓட்டங்களுடன் வெளியேறினார்.  

பின்னர்இணைந்த அறிமுக வீரர் பெதும் நிஸ்ஸங்க சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார். இவரது ஓட்டங்கள் பெறும் வேகம் குறைவாக இருந்த போதும்துடுப்பாட்  ுறை அனைவரது கவனத்தையும் ஈர்த்ததுமறுபக்கம் 29 பந்துகள் துடுப்பெடுத்தாடிய நிரோஷன் டிக்வெல்ல ஒரு சிக்ஸர் மற்றும  3 பௌண்டரிகள் அடங்கலாக 33 ஓட்டங்களை பெற்றுக்கொள்ளபெதும் நிஸ்ஸங்க 34 ந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 39 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். 

பின்னர் களமிறங்கிய வீரர்களில்அணித்தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் உட்பட எந்தவொரு வீரரும் அதிகமான ஓட்டங்களையோ அல்லது வேகமாக ஓட்டங்களையோ குவிக்கத் தவறினர்.

எனவேஇலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 131 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. பின்வரிசை வீரர்களின் அறிமுக வீரர் அஷேன் பண்டார 6 பந்துகளில் 10 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார். மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில்ஒபெட் மெக்கோய் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன்ஏனைய பந்துவீச்சாளர்கள் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி அகில தனன்ஜயவின் ஹெட்ரிக் விக்கெட்டுகளை தாண்டி, தங்களுக்கே உரித்தான அதிரடி துடுப்பாட்டத்துடனும், கீரன் பொல்லார்டின் 6 பந்துகளில் பெறப்பட்ட ஆறு சிக்ஸர்கள் ஊடாகவும் 13.1 ஓவர்களில் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. 

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எவின் லிவிஸ் மற்றும் லெண்டல் சிம்மன்ஸ் ஆகியோர் அதிரடி ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். வெறும் 3.1  ஓவர்களில் 50 ஓட்டங்களை கடந்த போதும்அகில தனன்ஜய தன்னுடைய இரண்டாவது ஓவரில் எவின் லிவிஸ்க்ரிஸ் கெயில் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்திT20i போட்டிகளில் தன்னுடைய முதலாவது ஹெட்ரிக்கை கைப்பற்றினார். 

தொடர்ந்து அகில தனன்ஜய வீசிய அவருடைய மூன்றாவது ஓவரில்கீரன் பொல்லார்ட் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசிஇந்திய அணியின் யுவராஜ் சிங்கிற்கு (2007 எதிர் இங்கிலாந்துஅடுத்தப்படியாக T20i போட்டிகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய சாதனையை படைத்தார். 

>> பெப்ரவரி மாத சிறந்த வீரர் விருதுக்கு மூவர் பரிந்துரை

எனினும்வனிந்து ஹசரங்க வீசிய அடுத்த ஓவரில் 38 ஓட்டங்களை பெற்றிருந்த பொல்லார்ட் ஆட்டமிழந்ததுடன்பெபியன் எலன் வந்த வேகத்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனையடுத்து ஜேசன் ஹோல்டர் மற்றும் டுவைன் பிராவோ ஆகியோரின் பிடியெடுப்பு வாய்ப்புகள் அஷேன் பண்டார மற்றும் அகில தனன்ஜய ஆகியோரால் தவறவிடப்படமேற்கிந்திய தீவுகள் அணி வெற்றியிலக்கை அடைந்தது. 

ஜேசன் ஹோல்டர் ஆட்டமிழக்காமல் 29 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன்இலங்கை கிரிக்கெட் அணி சார்பில் அகில தனன்ஜய மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அகில தனன்ஜய தன்னுடைய 4 ஓவர்களில் 62 ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருந்தார். 

மேற்கிந்திய தீவுகள் அணி 3 போட்டிகள் கொண்ட T20i தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்று, தொடரில் 1-0 என முன்னிலை வகிப்பதுடன், இரண்டாவது போட்டி நாளை மறுதினம் (06) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Result


Sri Lanka
131/9 (20)

West Indies
134/6 (13.1)

Batsmen R B 4s 6s SR
Niroshan Dickwella b Jason Holder 33 29 3 1 113.79
Danushka Gunathilaka c Kieron Pollard b Kevin SinClair 4 6 0 0 66.67
Pathum Nissanka st Nicholas Pooran b Fabian Allen 39 34 4 1 114.71
Dinesh Chandimal c Jason Holder b Obed McCoy 11 10 0 1 110.00
Angelo Mathews c Lendl Simmons b Fidel Edwards 5 6 0 0 83.33
Thisara Perera c Dwayne Bravo b Obed McCoy 1 4 0 0 25.00
Wanindu Hasaranga c Fabian Allen b Dwayne Bravo 12 14 0 0 85.71
Ashen Bandara run out () 10 6 1 0 166.67
Akila Dananjaya not out 9 9 0 0 100.00
Dushmantha Chameera run out () 2 2 0 0 100.00


Extras 5 (b 0 , lb 2 , nb 0, w 3, pen 0)
Total 131/9 (20 Overs, RR: 6.55)
Did not bat Nuwan Pradeep,

Fall of Wickets 1-20 (2.6) Danushka Gunathilaka, 2-71 (9.6) Niroshan Dickwella, 3-83 (12.2) Pathum Nissanka, 4-96 (13.6) Angelo Mathews, 5-97 (14.1) Dinesh Chandimal, 6-106 (16.2) Thisara Perera, 7-111 (17.2) Wanindu Hasaranga, 8-126 (19.3) Ashen Bandara, 9-131 (19.6) Dushmantha Chameera,

Bowling O M R W Econ
Kevin SinClair 3 0 26 1 8.67
Fidel Edwards 4 0 29 1 7.25
Jason Holder 4 0 19 1 4.75
Obed McCoy 4 0 25 2 6.25
Dwayne Bravo 4 0 26 1 6.50
Fabian Allen 1 0 4 1 4.00


Batsmen R B 4s 6s SR
Lendl Simmons lbw b Wanindu Hasaranga 26 15 3 2 173.33
Evin Lewis c Danushka Gunathilaka b Akila Dananjaya 28 10 2 3 280.00
Chris Gayle lbw b Akila Dananjaya 0 1 0 0 0.00
Nicholas Pooran c Niroshan Dickwella b Akila Dananjaya 0 1 0 0 0.00
Kieron Pollard lbw b Wanindu Hasaranga 38 11 0 6 345.45
Jason Holder not out 29 24 1 2 120.83
Fabian Allen lbw b Wanindu Hasaranga 0 1 0 0 0.00
Dwayne Bravo not out 4 17 0 0 23.53


Extras 9 (b 0 , lb 4 , nb 1, w 4, pen 0)
Total 134/6 (13.1 Overs, RR: 10.18)
Did not bat Kevin SinClair, Obed McCoy, Fidel Edwards,

Fall of Wickets 1-52 (3.2) Evin Lewis, 2-52 (3.3) Chris Gayle, 3-52 (3.4) Nicholas Pooran, 4-62 (4.6) Lendl Simmons, 5-101 (6.4) Kieron Pollard, 6-101 (6.5) Fabian Allen,

Bowling O M R W Econ
Angelo Mathews 1 0 19 0 19.00
Akila Dananjaya 4 0 62 3 15.50
Dushmantha Chameera 3 0 29 0 9.67
Wanindu Hasaranga 4 0 12 3 3.00
Ashen Bandara 1 0 2 0 2.00
Nuwan Pradeep 0.1 0 6 0 60.00



>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<