மஞ்சி சுப்பர் லீக் இறுதிப்போட்டியில் இராணுவ, விமானப்படை அணிகள்

Munchee National Volleyball Championship 2021

129

இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில், நடைபெற்று வரும் மகளிருக்கான மஞ்சி மகளிர் சுப்பர் லீக் இறுதிப்போட்டிக்கு, இலங்கை இராணுவ விளையாட்டு கழகம் மற்றும் இலங்கை விமானப்படை விளையாட்டு கழகம் என்பன முன்னேறியுள்ளன.

மகளிருக்கான முதல் அரையிறுதிப்போட்டியில், இலங்கை விமானப்படை அணி மற்றும் இலங்கை கடற்படை அணிகள் மோதியிருந்தன. போட்டியில் முதல் இரண்டு செட்களையும் இலங்கை விமானப்படை அணி 25-20 மற்றும் 25-22 என கைப்பற்றியது. மூன்றாவது செட்டை இலங்கை கடற்படை அணி 25-20 என கைப்பற்றியது.

தேசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் Bitu Link, CEB

தொடர்ந்து நடைபெற்ற நான்காவது செட்டை 25-18 என இலகுவாக இலங்கை விமானப்படை அணி வெற்றிக்கொண்டது. இதன்மூலம், 3-1 என்ற செட்கள் கணக்கில் வெற்றிபெற்ற விமானப்படை விளையாட்டு கழகம் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை தக்கவைத்தது.

இதற்கு அடுத்தப்படியாக நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப்போட்டியில், இலங்கை இராணுவ விளையாட்டு கழகம் மற்றும் ஹைட்ராமணி விளையாட்டு கழகங்கள் மோதின. இந்தப்போட்டியில் 3-1 என்ற செட்கள் கணக்கில் இலங்கை இராணுவ அணி வெற்றிபெற்றது.

போட்டியின் முதல் செட்டை இராணுவ விளையாட்டு கழகம் 25-14 என வெற்றிக்கொண்டதுடன், இரண்டாவது செட்டை ஹைட்ராமணி அணி  25-21 என கைப்பற்றியது. எனினும், அடுத்த இரண்டு செட்களையும் 32-30 மற்றும் 25-23 என்ற புள்ளிகள் கணக்கில் இராணுவ அணி வெற்றிக்கொண்டு அரையிறுதிக்கு முன்னேறியது.

குறித்த இந்த போட்டிகளில் தோல்வியடைந்த ஹைட்ராமணி மற்றும் கடற்படை அணிகள் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் மோதிக்கொண்டன. இதில், 25-12, 25-15 மற்றும் 25-15 என்ற புள்ளிகள் கணக்கில் 3-0 என வெற்றிபெற்ற கடற்படை விளையாட்டு கழகம் மூன்றாவது இடத்தை பிடித்துக்கொண்டது.

மஞ்சி சுப்பர் லீக் தொடரின், இறுதிப்போட்டியில் இலங்கை இராணுவ விளையாட்டு கழகம் மற்றும் இலங்கை விமானப்படை அணிகள் மோதவுள்ளதுடன், இந்தப்போட்டி எதிர்வரும் 13ம் திகதி மஹரகமவில் உள்ள தேசிய இளையோர் சேவைகள் உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<