கொவிட்-19 தொற்று காரணமாக பிற்போடப்பட்ட PSL போட்டி

108
Pakistan Super League
Getty Images

கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட, இஸ்லாமபாத் யுனைடட் மற்றும் குயெட்டா கிளேடியேட்டர்ஸ் அணிகள் இடையிலான பாகிஸ்தான் சுபர் லீக் (PSL) தொடரின் குழுநிலைப் போட்டி இன்று (2) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

ஆசிய கிண்ணம் மீண்டும் தள்ளிப்போகும் சாத்தியம்

இஸ்லாமபாத் யுனைடட் அணியின் பந்துவீச்சாளர்களில் ஒருவரான பவாட் அஹ்மட், கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருப்பது கண்டறியப்பட்டதனை அடுத்து திங்கட்கிழமை (1) நடைபெறவிருந்த இஸ்லாமபாத் யுனைடட் மற்றும் குயெட்டா கிளேடியேட்டர்ஸ் அணிகள் இடையிலான போட்டி ஒத்திவைக்கப்பட்டது. 

பின்னர், பாகிஸ்தான் சுபர் லீக் தொடரினுடைய தொழில்நுட்பக் குழு எடுத்த முடிவுக்கு அமைய ஒத்திவைக்கப்பட்ட போட்டியானது இன்றைய நாளுக்கு மாற்றப்பட்டிருக்கின்றது. 

ஆசிய கிண்ணம் மீண்டும் தள்ளிப்போகும் சாத்தியம்

”போட்டியினை மற்றுமொரு நாளுக்கு மாற்றுவதற்கான இந்த தீர்மானம் மிகவும் கவனமாக அவதானிக்கப்பட்டு எடுக்கப்பட்டிருக்கின்றது. இதில், வீரர்கள் போதுமான அளவு ஓய்வு பெறவும் தொடரில் தொடர்ந்து கவனம் செலுத்தி பரிசோதனைகளை முகம் கொடுக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.” என பாகிஸ்தான் சுபர் லீக் தொடரின் போட்டி ஒத்திவைக்கப்பட்ட விடயம் தொடர்பில் வெளியான ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

மறுமுனையில், பவாட் அஹ்மட் இரண்டு தடவைகள் கொவிட் வைரஸ் பரிசோதனைகளுக்கு முகம்கொடுத்து அதில் சரியான முடிவுகளை காட்டும் பட்சத்தில் மீண்டும் பாகிஸ்தான் சுபர் லீக் தொடரின் போட்டிகளில் பங்கெடுக்க முடியும் என குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க