முதல் டெஸ்ட்டுக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு

88
Associated Press

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB), நாளை (26) கராச்சியில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான தமது அணிக்கான 17 பேர் கொண்ட வீரர்கள் குழாமை அறிவித்திருக்கின்றது.

பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி, அந்த நாட்டு வீரர்களுடன் ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகின்றது.

ஒன்பது புதுமுக வீரர்களை அறிமுகம் செய்யும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

அதன்படி, இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பங்கெடுக்கவிருக்கும் 17 வீரர்கள் கொண்ட குழாமே பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

பாபர் அசாமினால் வழிநடாத்தப்படவிருக்கும் இந்த டெஸ்ட் குழாத்தில், ஆறு புதுமுக வீரர்கள் இணைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்த புதுமுக வீரர்களில் நொமான் கான், சஜீத் கான் ஆகியோர் சுழல் பந்துவீச்சாளர்களாக இருக்க, ஹரிஸ் ரவுப் மற்றும் தபிஷ் கான் ஆகியோர் வேகப் பந்துவீச்சாளர்களாக உள்ளனர். இதேவேளை, துடுப்பாட்ட வீரர்களுக்கான அறிமுகத்தினை செளத் சக்கீல், இம்ரான் பட்டுடன் இணைந்து பெற்றுக் கொள்வது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், வேகப் பந்துவீச்சாளரான ஹசன் அலியும் உள்ளூர் போட்டிகளில் அசத்தலாக செயற்பட்டு பாகிஸ்தான் டெஸ்ட் குழாத்திற்குள் நீண்ட காலத்தின் பின்னர் இணைந்திருக்கின்றார். 

பாகிஸ்தான் மண்ணில் 14 வருடங்களின் பின் தென்னாரிக்கா அணி

அதேவேளை, பாகிஸ்தானின் கடைசி டெஸ்ட் தொடரில் சொதப்பியிருந்த ஷான் மசூத், ஹரிஸ் சொஹைல் மற்றும் மொஹமட் அப்பாஸ் ஆகியோருக்கு தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதோடு சதாப் கான் மற்றும் நஸீம் சாஹ் ஆகியோரும் இந்த தொடரில் உபாதை காரணமாக விளையாடவில்லை.

பாகிஸ்தான் டெஸ்ட் குழாம் – ஆபித் அலி, இம்ரான் பட், அஷார் அலி, பாபர் அசாம் (அணித்தலைவர்), செளத் சக்கீல், பஹிம் அஷ்ரப், மொஹமட் நவாஸ், மொஹமட் ரிஸ்வான், சர்பராஸ் அஹ்மட், நொமான் அலி, சஜீத் கான், யசிர் சாஹ், ஹரிஸ் ரவுப், ஹசன் அலி, சஹீன் சாஹ் அப்ரிடி, தபிஷ் கான் 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<