இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பும் கோஹ்லி, ஹர்திக் பாண்டியா

189

இங்கிலாந்து அணியுடன் அடுத்த மாதம் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி நேற்று (19) அறிவிக்கப்பட்டது. 

இதில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள 18 பேர் கொண்ட இந்திய அணியில் விராட் கோஹ்லி, ஹர்திக் பாண்டியா, இஷாந்த் சர்மா உள்ளிட்டோர் மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்

எனினும், நேற்று (19) நிறைவுக்கு வந்த பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிய தமிழக வீரர் தங்கராசு நடராஜனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை

ஆசிய கிண்ணமா? டெஸ்ட் சம்பியன்ஷிப்பா? குழப்பத்தில் இந்தியா

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற மிகப்பெரிய கிரிக்கெட் தொடரை இந்தியா வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதில் ஒருநாள் தொடரை அவுஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்த நிலையில், டெஸ்ட் தொடரையும், T20 தொடரையும் இந்திய அணி கைப்பற்றியது

இதனிடையே, இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் 2 டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. அடுத்த போட்டிகள் அஹமதாபாத்தில் நடைபெறவுள்ளன.

இதற்கான இந்திய அணியை சேத்தன் சர்மா தலைமையிலான தலைமை தேர்வுக் குழு அறிவித்துள்ளது. இதில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் அறிமுகமான நடராஜன் பெயர் இடம்பெறவில்லை. அதேபோல, அவுஸ்திரேலிய தொடரில் பெரிதும் சோபிக்காத ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பிரித்வி ஷாவும் சேர்க்கப்படவில்லை.

இதனிடையே, அவுஸ்திரேலிய தொடரில் கடைசி 3 போட்டிகளிலும் விளையாடாத அணித் தலைவர் விராட் கோஹ்லி, அணிக்குத் திரும்பியுள்ளார்

Video – Lahiru Thirimanne சதமடித்தும் இலங்கைக்கு ஏன் தோல்வி? | Sports Roundup – Epi 145

நீண்ட காலத்துக்குப் பின் சகல்துறை வீரர் ஹர்திக் பாண்டியா டெஸ்ட் போட்டிக்குத் திரும்பியுள்ளார். பந்து வீசுவதில் சிரமம் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் டெஸ்ட் தொடரில் ஹர்திக் பாண்டியா இடம்பெற்றுள்ளார்

காயம் காரணமாக ஆஸி. தொடருக்குச் செல்லாமல் தவிர்த்த வேகப் பந்துவீச்சாளர் ஷாந்த் சர்மா இந்திய அணிக்குள் வந்துள்ளார். அதேபோல, சுழல் பந்துவீச்சாளர் அக்ஷர் படேல் அணியில் இடம்பெற்றுள்ளார்

அத்துடன், கே.எல் ராகுலும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், அவரது உடற்தகுதியைப் பொறுத்தே அணியில் வாய்ப்பு வழங்கப்படும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அஷ்வினால் 800 விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் – முரளிதரன்

இந்திய டெஸ்ட் அணியில் காயம் காரணமாக மொஹமட் ஷமி, ஜடேஜா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ் போனன்ற முன்னணி வீரர்கள் இடம்பெறவில்லை. அதேபோல, வேகப் பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி காலில் ஏற்பட்ட காயத்தால் அணியில் இடம்பெறவில்லை.  

இதேநேரம், மாற்று வீரர்களாக பிரியங்க் பஞ்சல், கே.எஸ்.பரத், அபிமன்யு ஈஸ்வரன், சபாஸ் நதீம், ராகுல் சாஹர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்களாக அங்கித் ராஜ்புத், ஆவேஷ் கான், சந்தீப் வாரியர்,கே. கௌதம், சவுரப் குமார் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் பெப்ரவரி 5ஆம் திகதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னையில் 13ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.

முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய குழாம்  

விராட் கோஹ்லி (தலைவர்), அஜின்கியா ரஹானே (துணை தலைவர்), ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், சுப்மான் கில், புஜாரா, விருதிமான் சாஹா, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் (உடல் தகுதி அடிப்படையில்), ஜஸ்பிரித் பும்ரா, ஷாந்த் சர்மா, மொஹமட் சிராஜ், ஷர்துல் தாகூர், ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், வொஷிங்டன் சுந்தர், அக்ஷர் படேல் 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<