ஆசிய கிண்ணமா? டெஸ்ட் சம்பியன்ஷிப்பா? குழப்பத்தில் இந்தியா

3554

இந்த வருடம் இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து இந்தியா விலக முடிவு செய்துள்ளதாக Times Of India நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பங்குபற்றலுடன் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெற்று வருகின்றன

இதில் கடந்த வருடம் பாகிஸ்தானில் நடைபெறவிருந்த ஆசிய கிண்ண T20 தொடர் கொவிட்-19 வைரஸ் காரணமாக இந்த வருடத்துக்கு மாற்றப்பட்டதுடன், பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டியை நடத்தும் உரிமையை இலங்கையிடம் வழங்குவதற்கு ஆசிய கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்தது.

இதன்படி, எதிர்வரும் ஜுன் மாதம் ஆசிய கிண்ண T20 தொடரை இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்படுள்ளது.

2021 IPL ஏலம்: வீரர்களை தக்கவைக்கும் திகதி அறிவிப்பு

எனினும், குறித்த காலப்பகுதியில் ஐ.சி.சி. இன் டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

அத்துடன், இந்திய அணி இதன் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதால் இலங்கையில் நடைபெறவுள்ள ஆசிய கிண்ண T20 தொடரில் இருந்து விலக இந்திய கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளது

ஒருவேளை இந்தியா அணி .சி.சி இன் டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதிபெறாவிட்டால் நியூஸிலாந்து அல்லது தென்னாப்பிரிக்கா அணிகளுடன் குறித்த காலப்பகுதியில் சொந்த மண்ணில் T20 தொடர்களில் விளையாடுவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளது

இதில் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா அல்லது இலங்கை என ஏதாவது ஒரு அணி இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

புதிய ஜேர்சியுடன் களமிறங்கவுள்ள பங்களாதேஷ் அணி!

அதேபோல, இந்தியாவில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்துக்கு முன் நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு T20 மற்றும் டெஸ்ட் போட்டித் தொடர்களில் விளையாட உள்ளதாக கூறப்பட்டுள்ளது

இந்த ஆண்டின் இறுதியில் இந்த தொடர் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது T20 உலகக் கிண்ணத்துக்கு முன்னதாகவே இந்த தொடர் நடைபெறவுள்ளதாக தெரிகிறது.

எது எவ்வாறாயினும், இதுதொடர்பில் இந்திய கிரிக்கெட் சபை எந்தவொரு உத்தியோகப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை

பாகிஸ்தான் மண்ணில் 14 வருடங்களின் பின் தென்னாரிக்கா அணி

ஒருவேளை இந்திய அணி ஆசிய கிண்ணத் தொடரில் விளையாட மறுத்தால், தொடரை நடத்தும் பாகிஸ்தான், இதில் பங்கேற்கும் மற்ற அணிகளுக்கும் பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<