Home Tamil வெற்றியுடன் LPL தொடரினை ஆரம்பித்த ஜப்னா ஸ்டாலியன்ஸ்

வெற்றியுடன் LPL தொடரினை ஆரம்பித்த ஜப்னா ஸ்டாலியன்ஸ்

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

277
SLC

ஹம்பாந்தோட்டையில் நடைபெற்று முடிந்திருக்கும் அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரின் இரண்டாவது போட்டியில், ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியினர் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியினை 8 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கின்றனர்.

முன்னதாக இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் தலைவர் சஹிட் அப்ரிடி, முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார். 

சுப்பர் ஓவர் மூலம் LPL தொடரின் முதல் வெற்றியை பெற்ற கொழும்பு கிங்ஸ்

இப்போட்டிக்கான கோல் கிளேடியேட்டர்ஸ் அணியில் கண்டி மடவளை நகரினைச் சேர்ந்த மொஹமட் சிராஸ் அறிமுகம் பெற்றிருக்க, பாகிஸ்தானின் அசாம் கான், மொஹமட் ஆமீர், சட்விக் வால்டன் ஆகியோர் வெளிநாட்டு வீரர்களாக உள்வாங்கப்பட்டிருந்தனர். அதேநேரம், திசர பெரேரா தலைமையிலான ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி சொஹைப் மலிக், டுவான்னே ஒலிவியர், டொம் மூர்ஸ் மற்றும் கைல் எப்போட் ஆகியோரினை வெளிநாட்டு வீரர்களாக இணைத்திருந்தது.  

கோல் கிளேடியேட்டர்ஸ் – தனுஷ்க குணத்திலக்க, சட்விக் வால்டன், அசாம் கான் (WK), பானுக்க ராஜபக்ஷ, சஹிட் அப்ரிடி (C), அகில தனன்ஞய, மிலிந்த சிறிவர்தன, செஹான் ஜயசூரிய, மொஹமட் சிராஸ், மொஹமட் ஆமீர், அசித்த பெர்னாந்து

ஜப்னா ஸ்டாலியன்ஸ் – அவிஷ்க பெர்னாந்து, தனன்ஞய டி சில்வா, சொஹைப் மலிக், மினோத் பானுக்க, டொம் மூர்ஸ் (WK), திசர பெரேரா (C), வனிந்து ஹஸரங்க, சத்துரங்க டி சில்வா, கைல் எப்போட், டுவான்னே ஒலிவியர், பினுர பெர்னாந்து

தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைவாக போட்டியில் துடுப்பாடிய கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு ஆரம்ப வீரராக களம் வந்த தனுஷ்க குணத்திலக்க நல்ல ஆரம்பத்தினை வழங்கினார். எனினும், தனது ஆட்டத்தினை நீண்ட இன்னிங்ஸ் ஒன்றாக மாற்றத் தவறிய தனுஷ்க குணத்திலக்கவினால் 30 பந்துகளுக்கு 38 ஓட்டங்களையே பெற முடிந்தது. 

குணத்திலக்கவின் விக்கெட்டினை அடுத்து கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் முன்வரிசை வீரர்களான பானுக்க ராஜபக்ஷ, அசாம் கான் மற்றும் மிலிந்த சிறிவர்தன ஆகியோர் ஜப்னா ஸ்டாலியன்ஸின் டுவான்னே ஒலிவியர், வனிந்து ஹஸரங்க ஆகியோரின் பந்துவீச்சினால் எதிர்பார்த்த ஆட்டத்தினை வழங்கத் தவறினர்.

புதிய நிர்வாகக் குழுவினை அறிவித்திருக்கும் ஜப்னா ஸ்டாலியன்ஸ்

எனினும், இவர்களின் விக்கெட்டுக்களை அடுத்து களம் வந்த கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் தலைவர் சஹிட் அப்ரிடி ஆட்டத்தின் இறுதி ஓவர்களில் மைதான எல்லைகளை பதம்பார்க்கத் தொடங்கினார்.

தொடர்ந்து சஹிட் அப்ரிடியின் அதிரடியோடு கோல் கிளேடியேட்டர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 175 ஓட்டங்களை குவித்தது. கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பாக அப்ரிடி T20 போட்டிகளில் தான் பெற்றுக் கொண்ட 10ஆவது அரைச்சதத்துடன் வெறும் 23 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 58 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். 

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பாக டுவான்னே ஒலிவியர் 44 பந்துகளுக்கு 4 விக்கெட்டுக்களையும், வனிந்து ஹஸரங்க 2 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தனர். 

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 176 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி ஆரம்பத்தில் சிறிய தடுமாற்றம் ஒன்றை காட்டியது. 

Video – தீவிரமான பயிற்சிகளில் ஈடுபடும் Galle Gladiators

எனினும், மந்தமான முறையில் தனது துடுப்பாட்டத்தினை துவங்கி பின்னர் அதிரடி காட்டிய இளம் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாந்து ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியினை  வலுப்படுத்தினார். தொடர்ந்து, அவிஷ்கவின் அதிரடியுடன் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியினர் போட்டியின் வெற்றி இலக்கினை 19.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களுடன் அடைந்தனர்.

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் வெற்றிக்கு உதவிய அவிஷ்க பெர்னாந்து T20 போட்டிகளில் தான் வெளிப்படுத்திய சிறந்த இன்னிங்ஸ் உடன் 62 பந்துகளுக்கு 7 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 92 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் நின்றார். அதேநேரம், ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் வெற்றிக்கு நிதானமாக ஆஅடி பங்களிப்பினை வழங்கிய சொஹைப் மலிக் 27 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் எடுத்திருந்தார். 

கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் மொஹமட் சிராஸ் மற்றும் மொஹமட் ஆமீர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர். 

இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக அவிஷ்க பெர்னாந்து தெரிவாகினார்.

இதேநேரம், இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கு இந்த LPL தொடரில் சிறந்த ஆரம்பம் ஒன்று கிடைத்திருக்கின்றது. 

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி தமது அடுத்த போட்டியில் தம்புள்ள வைகிங் அணியினை எதிர்வரும் திங்கட்கிழமை (30) எதிர்கொள்ள ஜப்னா ஸ்டாலியன்ஸ் உடன் இப்போட்டியில் தோல்வியடைந்த கோல் கிளேடியேட்டர்ஸ் நாளை (28) கொழும்பு கிங்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடாத்தவிருக்கின்றது. 

போட்டியின் சுருக்கம்

Result


Jaffna Kings
176/2 (19.3)

Galle Gladiators
175/8 (20)

Batsmen R B 4s 6s SR
Chadwick Walton c Wanindu Hasaranga b Duanne Olivier 4 7 0 0 57.14
Danushka Gunathilaka b Wanindu Hasaranga 38 30 7 0 126.67
Azam Khan c Dhananjaya de Silva b Wanindu Hasaranga 20 18 1 1 111.11
Bhanuka Rajapakse c Binura Fernando b Duanne Olivier 21 20 3 0 105.00
Milinda Siriwardane c Chathuranga de Sliva b Duanne Olivier 2 5 0 0 40.00
Shahid Afridi c Tom Moores b Duanne Olivier 58 23 3 6 252.17
Shehan Jayasuriya run out (Tom Moores) 17 11 0 2 154.55
Mohammad Amir c Tom Moores b Thisara Perera 3 3 0 0 100.00
Akila Dananjaya not out 2 3 0 0 66.67


Extras 10 (b 0 , lb 5 , nb 0, w 5, pen 0)
Total 175/8 (20 Overs, RR: 8.75)
Did not bat Asitha Fernando, Mohamed Shiraz,

Fall of Wickets 1-24 (3.3) Chadwick Walton, 2-58 (7.5) Danushka Gunathilaka, 3-79 (11.2) Azam Khan, 4-92 (13.1) Bhanuka Rajapakse, 5-93 (13.3) Milinda Siriwardane, 6-155 (17.6) Shahid Afridi, 7-166 (18.6) Mohammad Amir, 8-175 (19.6) Shehan Jayasuriya,

Bowling O M R W Econ
Binura Fernando 3 0 27 0 9.00
Kyle Abbott 4 0 46 0 11.50
Duanne Olivier 4 0 44 4 11.00
Thisara Perera 4 0 30 1 7.50
Wanindu Hasaranga 4 0 12 2 3.00
Shoaib Malik 1 0 12 0 12.00


Batsmen R B 4s 6s SR
Avishka Fernando not out 92 63 5 7 146.03
Minod Bhanuka c Azam Khan b Mohammad Amir 18 10 1 2 180.00
Tom Moores c Shahid Afridi b Mohamed Shiraz 18 14 3 0 128.57
Shoaib Malik not out 27 31 1 0 87.10


Extras 21 (b 0 , lb 2 , nb 1, w 18, pen 0)
Total 176/2 (19.3 Overs, RR: 9.03)
Did not bat Dhananjaya de Silva, Thisara Perera, Wanindu Hasaranga, Chathuranga de Sliva, Kyle Abbott, Binura Fernando, Duanne Olivier,

Fall of Wickets 1-35 (3.2) Minod Bhanuka, 2-66 (7.4) Tom Moores,

Bowling O M R W Econ
Akila Dananjaya 3.3 0 33 0 10.00
Mohammad Amir 4 0 29 1 7.25
Asitha Fernando 3 0 28 0 9.33
Shahid Afridi 4 0 20 0 5.00
Mohamed Shiraz 3 0 38 1 12.67
Milinda Siriwardane 2 0 25 0 12.50



முடிவு – ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<